Header Banner Advertisement

பறவைகள் நாடு விட்டு நாடு பறந்து போவது எப்படி?


www.villangaseithi.com

print
இந்த இயற்கையின் அற்புதத்திற்கு பெயர் ‘பேர்ட் மைக்ரேஷன்.’ பறவைகளில் இரண்டு வகை உண்டு. 1. பிறந்த மண்ணை விட்டுப் போகாத பாசக்காரப் பறவைகள். 2. பல்வேறு காரணங்க ளுக்காக அடிக்கடி டூர் அடிக்கும் சாகசப் பறவைகள். வானிலை மாற்றங்களைச் சமாளிக்கவும், இனப்பெருக்க மாற்றங்களைச் சமாளிக்கவும், இனப் பெருக்கம் செய்யவும், குட்டிகளைப் பெற்றுப் போடவும், உணவு, தண்ணீருக்காகவும்தான் இந்த இரண்டாவது ரகப் பறவைகள் ஊர் சுற்றுகின்றன. பொதுவாக இடம் பெயரும் பறவைகள் கூட்டமாகவும், ‘வி’ வடிவத்திலும் பறக்கும்.
அப்படிப் பறக்கும்போது அவை செலவழிக்க வேண்டிய சக்தி பலமடங்கு குறைகிறதாம். எவரெஸ்ட் சிகரத்தின் அருகில் கூட பல இடம் பெயர்ந்த பறவைகளின் எலும்புக் கூடுகள் கிடைத்திருக்கின் றன. பெங்குவின் பறவைகள் 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலில் நீந்தியே இடம் பெயர்கின்றன. காட்விட்ஸ் பறவைகள் நடுவில் ஓய்வே எடுக்காமல் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நான் ஸ்டாப்பாகப் பறக்கக்கூடிய அபார ஆற்றல் கொண்டவை. பறத்தலின் போது, உடலில் உள்ள கொழுப்பே எரிசக்தியாக அமைகிறதாம்.
ஆர்டிக் கண்டத்தி லிருந்து அண்டார்டிகா கண்டம் வரை பயணம் செய்யும் ஆர்டிக் டர்ன் எனப்படும் பறவைதான் இடம் பெயர்தலில் நீண்ட தூரப் பறப்பவை. 22 ஆயிரம் கிலோமீட்டர்கள் இவை பறக்கின்றன. இடம்பெறும் பறவைகளுக்கு, தான் போக வேண்டிய வழியின் தடங்கள் எப்படித் தெரிகின்றன? ‘இன்ஸ்டிங்கட்’ என்னும் உள்ளுணர்வு என்கிறார்கள் விஞ்ஞானிகள். தான் செல்ல வேண்டிய இடம், அவற்றை காந்தம் போல் இழுக்கிறதாம். இடம் பெயரும் பறவையைத் தொடர்ந்து கண்காணித்த விஞ்ஞானிகள் அவை பாலங்கள், பெரிய கட்டடங்கள் போன்றவற்றைக் கூட அடையாளங்களாக வைத்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.