Header Banner Advertisement

பலூன் பறந்த கதை


002

print
ந்தவொரு பெரிய விழாவாக இருந்தாலும் பலூன்களை பறக்கவிடுவது இன்றைக்கு ஒரு தவிர்க்கமுடியாத நிகழ்வாக இருக்கிறது. இப்படி பறக்கவிடப்படும் பலூன்கள் பெரும்பாலும் ரப்பர், பட்டு மற்றும் காகிதம் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இந்த பலூன்களில் சாதாரண காற்றைவிட எடை குறைந்த ஹைட்ரஜன் அல்லது ஹீலியம் வாயு நிரப்பப்படுகின்றன. இந்த வாயுக்களின் எடை குறைவு காரணமாக பலூன்கள் காற்றில் பறக்கின்றன.சில பலூன்களில், அதுவும் பிரமாண்டமான பலூன்கள் என்றால் இந்த வாயுக்களுக்குப் பதில் வெப்பமான காற்றை அடைத்து பறக்கவிடுகிறார்கள். ஆகாயத்தில் பறக்க வேண்டும் என்ற மனிதனின் ஆசைதான் பறக்கும் பலூன்கள் உருவாக காரணம். இப்படி பலூன்களை பறக்கவிடும் முறை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

முதன் முதலாக 1783-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாண்ட்கோஃபியர் என்ற சகோதர்கள்தான் பட்டால் செய்யப்பட்ட பலூனை உருவாக்கினார்கள்  பட்டுத் துணியைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பலூனின் அடிப்பகுதி திறந்திருந்தது. தரையில் சில பொருட்களை போட்டு எரித்து, அதன் புகையை பட்டுப் பலூனில் நிரப்பினார்கள். சூடான காற்று நிரம்பப்பெற்ற பலூன் ஆகாயத்தில் பறந்தது. மக்கள் வியப்போடு அதனை பார்த்தார்கள். இந்த முதல் பலூன் 2 கி.மீ. உயரம் வரை சென்றது.
முதல் பறக்கும் பலூன்
1783, செப்டம்பர் 19-ல் இந்த பலூனுக்கு அடியில் ஒரு சிறிய கூடையைக் கட்டிவிட்டு, அந்தக் கூடையில் ஒரு சேவல், ஒரு வாத்து, ஒரு ஆடு ஆகியவற்றை வைத்து ஆகாயத்தில் பலூனை பறக்கவிட்டார்கள். பிரான்ஸ் மன்னர் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பலூன் பறப்பதை பார்ப்பதற்காக ஓரிடத்தில் கூடினார்கள். 1783, நவம்பர் 21-ல் முதன்முதலாக மனிதன் அமர்ந்த பலூன் பறக்கவிடப்பட்டது. இந்த பலூன் பாரிஸ் நகரின் மீது 9 கி.மீ. தூரம் பறந்து புதிய சாதனையைப் படைத்தது.

மனிதர்கள் அமர்ந்து பறக்க விடப்படும் பலூன்கள் காற்று வீசும் திசையின் அடிப்படையில் பறந்தன. தொடர்ந்து பலூன்களை பறக்கவிடுவதில் விஞ்ஞானிகள் பல முன்னேற்றங்களை செய்தனர். இவை பின்னாளில் ஆகாய விமானம் கண்டுபிடிக்கவும், அதில் பல முன்னேற்றங்கள் செய்யவும் காரணமாக அமைந்தன.

1900-ல் இருந்து பறக்கும் பலூன்கள் வானிலை ஆய்வு மற்றும் தகவல் பெற பயன்படுத்தப்பட்டுகிறது. பறக்கும் பலூனில் மிக உயரத்துக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து புதிய உலக சாதனையை செய்தவர் பெலிக்ஸ் என்ற ஆஸ்திரேலிய நாட்டுக்காரர். இவர் 2012-ம் ஆண்டில் பூமியிலிருந்து 39 கி.மீ. உயரம் வரை பறந்து அங்கிருந்து கீழே குதித்தார். இதுதான் மனிதன் பறக்கும் பலூனில் மிக உயரத்துக்கு சென்ற சாதனையாக உள்ளது.

39 கி.மீ. உயரத்தில் இருந்து குதித்த ஃபெலிக்ஸ்