
சன்டூரி சாய் ரிஸார்ட்
![]() |
ரிஸார்ட் அமைந்திருக்கும் கெளடகுடா பழங்குடிகள் கிராமம் |
ஒடிஸா பழங்குடியினரின் ஆடம்பரமான ரிஸார்ட் தான் சன்டூரி சாய். சன்டூரி என்பது மருத்துவ குணம் மிக்க மாமரத்தின் பெயர். திறந்த புல்வெளிகளுடன் இணைந்தவாறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த புல்வெளிகளில் பழங்குடிப் பெண்கள் உழவு வேலைகளில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம்.
![]() |
தங்கும் அறைகள் |
![]() |
ரிசார்ட்டின் லிவ்விங் ரூம் |
சுற்றுலா பயணிகளுக்கு மண்பாண்டம் செய்யும் தொழில் வேலைகளையும், நுணுக்கமான பயிற்சியாக இங்கு கற்றுத்தரப்படுகிறது.
![]() |
விவசாயத்தில் பழங்குடி இன பெண்கள் |
இங்குள்ள மார்க்கெட்டுகளில் இவர்களின் பாரம்பரிய உடைகளும், அணிகலன்களும் விற்கப்படுகின்றன. சுவை மிகுந்த ஒரியா உணவு வகைகளான ‘தால்மா’ மற்றும் ‘மச்சா கன்டா’ உண்பதற்கு ஏற்றது. இங்குள்ள ‘போராஜா’ அல்லது ‘கோன்டா’ இன பெண்களிடம் நாம் நட்புறவு கொண்டால் அவர்கள் அணிந்திருக்கும் வெள்ளி நகைகளில் ஏதேனும் ஒன்றை நமக்கு கொடுக்கும் அளவிற்கு பாசம் மிகுந்தவர்கள். இந்த மார்க்கெட்டில் நாம் கண்டிப்பாக வாங்கி வேண்டிய பொருள் என்றால் அது “போர்வை’ தான். அந்த அளவிற்கு வேலைப்பாடுகள் நிறைந்திருக்கும்.
![]() |
கோன்டா’ இன பெண் |
புவனேஸ்வரில் இருந்து 500 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது கெளடகுடா கிராமம்.
![]() |
போண்டா பழங்குடிப் பெண் |
சன்டூரி சாயில் இருவர் ஓர் இரவு தங்குவதற்கு ரூ.5,000 கட்டணமாகப் பெறப்படுகிறது.