Header Banner Advertisement

பின்லேடனின் பாலியல் அடிமை..!


Untitled

print
சுயசரிதைகள் எப்போதுமே சர்ச்சைக்குரியதுதான். அதிலும் கோலா பூஃப் என்ற கறுப்பினப் பெண் எழுதிய ‘டைரி ஆஃப் லாஸ்ட் கேர்ள்’ ஏகப்பட்ட அதிர்வலைகளை உலகுக்கு தந்த புத்தகம். அப்படியென்ன அந்த புத்தகத்தில் இருந்தது..?

கோலா பூப்
மொராக்கோ நாட்டில் உள்ள மராக்கேஷ் என்ற ஊரில் ஒரு உணவு விடுதியில் ஒருநாள் கோலா தனது நண்பனோடு அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தாள். அந்நாட்டு பெண்களின் இயல்பான கவர்ச்சியைவிட கோலாவுக்கு மிக அதிகமாகவே கவர்ச்சியை இயற்கை கொடுத்திருந்தது. அந்த கவர்ச்சி எத்தகைய ஆணையும் கிறங்கிப் போக வைத்துவிடும்.

அப்போது ஒருவன் கோலா அருகே வந்தான். “உங்களை அவர் கூப்பிடுகிறார்.” என்றான். அவனை முறைத்துப் பார்த்த அவள், கோபமாக, “என்னைக் கூப்பிட அவர் யார்?” என்றாள். “ஸாரி கேர்ள்! அவர் கூப்பிட்டு நீங்கள் போகாவிட்டால் உங்கள் உயிர் மட்டுமல்ல.. உங்கள் நண்பனின் உயிரும் உங்களிடம் இல்லை.” என்றான், அழைந்தவன்.

அதற்குள் ஏழெட்டுப் பேர் அவளின் ஆண் நண்பனை ரவுண்ட் கட்டி, பலவந்தமாக இழுத்துக்கொண்டு போனார்கள். கோலாவுக்கு எதுவும் புரியவில்லை. திடீரென்று கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் நடந்து விட்டது. இதுவே அமெரிக்காவாக இருந்தால் நடப்பதே வேறு. உடனே போலீஸ் வந்துவிடும். மொராக்கோ அப்படியல்ல. அங்கு வசதியானவர்களும் தாதாக்களும் வைத்ததே சட்டம்.

அந்த உயரமான நபர் கோலாவிடம், “இன்று முதல் நீ என் செக்ஸ் அடிமை” என்று சொல்லி, அன்றிரவே அவளுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டார். கோலா நிலைக்குலைந்து போனாள்.

ஓரிரு நாட்கள் சென்றபின் பெரிய அரண்மனைக்கு அவளை அழைத்துச் சென்றார்கள். குளியல் அறைக்கூட தங்கத்தில் ஜொலித்தது. அங்கு 6 மாதம் சிறை வைக்கப்பட்டாள். அந்த 6 மாதமும் சொல்லமுடியாத அளவுக்கு பாலியல் கொடுமைகளை அனுபவித்தாள் கோலா.

ஒசாமா பின்லேடன்
ஒருநாள் சூடான் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் வந்தார். அவருக்கு கோலா விருந்தாக்கப்பட்டாள். அந்த நபருக்கு கோலாவைப் பிடித்துப் போய்விட்டது. உடனே அவர் கோலாவை தன்னுடனே அழைத்துச் சென்றுவிட்டார்.

அவளின் அந்த கோடீஸ்வர எஜமானர் ஒரு சேடிஸ்ட். அதேசமயம் பல நேரங்களில் ஒரு சிறுவனைப் போல் நடந்து கொண்டார். சில சமயங்களில் அவள் மீது உயிரையே வைத்திருக்கும் காதலன் போல் வாஞ்சையோடு கொஞ்சுவார். விலை உயர்ந்த வைர மாலையை அணிவிப்பார். விசித்திரமான அந்த மனிதரை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினாள் கோலா.

என்னதான் வைரங்களைக் கொட்டிக்கொடுத்தாலும் ஒரு செக்ஸ் அடிமையாக தன் வாழ்வை தொடர கோலா விரும்பவில்லை. ஒரு நாள் தனது எஜமானர் நல்ல மூடில் இருந்த போது, “என்னை விட்டுவிடுங்கள் நான் மீண்டும் அமெரிக்கா பொய் விடுகிறேன்.” என்று கெஞ்சினாள். அந்த எஜமானருக்கு ஏராளமான மனைவிகள் இருந்தனர். தவிர, ஒரு பிரெஞ்ச் பெண்ணின் மீது வேறு அப்போது அவர் தீவிரமான காதலில் ஈடுபட்டிருந்தார்.

இப்படி பல சாதகங்கள் கோலாவுக்கு சாதகமாக இருந்ததால் அவளின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். கூடவே 20,000 அமெரிக்க டாலர் பணம் கொடுத்து, அவளுக்கு அவ்வப்போது படுக்கை அறை திருப்திக்காக பரிசாக கொடுத்த நகைகள், வைரங்கள் அத்தனையும் எடுத்துச் செல்லவும் அனுமதித்தார்.

இதெல்லாம் நடந்தது 1996-ல் அப்போது கோடீஸ்வரராக மட்டுமே அறியப்பட்டிருந்த அந்த எஜமானர் பின்னாளில் உலகமே பயப்படும் மனிதராக மாறுகிறார். அந்த எஜமானர்தான் ஒசாமா பின்லேடன்.

“நானும் ஒசாமாவும் பல போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம். இப்போது என்னிடம் ஒன்று கூட இல்லை. அந்த ஆள் இவ்வளவு பெரிய தீவிரவாதியாக மாறுவார் என்பது அப்போது எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் பத்திரப்படுத்தியிருப்பேன்.” என்கிறாள் கோலா பூஃப்.

புத்தகம் வெளிவந்த பின் கோலா பூஃப் உயிருக்கு பலமுறை குறிவைக்கப்பட்டது. பதிப்பகத்தில் குண்டு வீசப்பட்டது. இப்போதும் கூட ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்போடுதான் அமெரிக்காவில் நடமாடி வருகிறார் கோலா பூஃப்.