
கடந்த காலத்தில் நமக்கு ஏற்பட்ட..அல்லது ஏற்பட்டதாக நினைத்துகொண்ட பிரச்சைனைகள்..அலட்சியங்கள் அவதூறுகளை
எண்ணி…எண்ணி… குமுறுவதாலோ… வேதனைபடுவதாலோ..யாரிடமாவது சொல்லிகொண்டே இருப்பதினாலோ ஆகபோவது ஒன்றுமேயில்லை…
மாறாக…. ஆறவேண்டிய காயத்தை குத்தி கிளறி..கிளறி..மேலும் மேலும் விபரீதமாக்கி நமக்கு நாமே தீங்கிழைத்துக்கொள்கின்றோம்….
அதுமட்டுமல்ல..நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வையும் மனமகிழ்ச்சியையும்… நிம்மதியையும்..நமது எதிர்காலத்தையும்கூட அது தீவிரமாக பாதிக்கின்றது..அதற்கு நாமேதான் முழு பொறுப்பாளியாகின்றோம்….
நமக்கு இழைக்கபட்ட தீங்கோ..அநீதியோ…. சில சமயங்களில் வேண்டுமென்றே நடந்திருந்தாலும்…பெரும்பாலான நேரங்களில்… எதிர்பாராமல்…. தன்னையறியாமல்கூட நடந்திருக்கலாம்….
அதனை மறக்கவும் மன்னிக்கவும் பழகிவிட்டாலே போதும்… எவ்வளவோ குற்றங்கள் நடக்காமலேயே தடுத்துவிடலாம்..
கடந்தகால நிகழ்வுகளிலேயே மூழ்கிகிடப்பாதால். துவேஷமும்… பழிவாங்கும் உணர்வும் தீவிரமாக தூண்டிவிடப்பட்டு..நம்மை மிக எளிதில் நம்மையறியாமலேயேகூட குற்றவாளியாக்கிவிடும்…
மறதியும் நன்மைக்கே…. இந்தமாதிரியான விஷயங்களில்.. அல்லது அலட்சியபடுத்திவிடலாம்…
அல்லது… இது ஒன்றும் அவ்வளவு முக்கியமான விஷயமில்லையே நம் நல்வாழ்விற்கு என்று மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிடலாம்….
எது எப்படியோ..எப்பொழுதோ நடந்த விஷயங்களை கங்கனம் கட்டிகொண்டு… பொத்தி..பொத்தி கட்டிகாப்பதினால்..நமக்கு நாமேதான் ஆப்பு அடித்துகொள்கின்றோம்…
அதனால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம்… குலநாசமும் ஏற்பட்டுவிடும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் போதும்..
உடலில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் பலவிதமான பரிசோதனைகளுக்கு பின்னரே இன்ன பிரச்சனை என்று கண்டறியப்பட்டு…நிவாரணத்திற்கு வைத்தியம் பார்க்கப்படுகிறது..
வாழ்க்கையில் தோல்வி பிரச்சனைகள் என்றால் மட்டும் மனதை திடப்படுத்தி…. தோல்விக்கான பிரச்சனைக்கான காரண காரியங்களை அக்கு வேறு ஆணி வேராக அலசி ஆராய தவறிவிடுகின்றோம்…
உடனடியாக மன உளைச்சல்…கவலை..வேதனை… நோய்கொண்டு.. செய்வதறியாது..தவித்து.. மேலும் மேலும் பிரச்சனைகளையும் தோல்விகளையும் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றோம்…
அது எப்படிபட்டவராயினும்…இதையெல்லாம் நன்கு உணர்ந்த அறிந்தவராயினும்…. தனக்கென்று வரும்போது மட்டும்..நிதானத்தை கடைபிடிக்க முடிவதில்லை… போச்சே என்ற ரீதியில்தான் இருக்கும் நடவடிக்கைகள்…
அந்த நேரம் தவறினாலும்..மனித மனம்.. சிறிது சறுக்கினாலும்.. உடனடியாக சுதாரித்து கொள்வதுதான் நலம்….
கெட்ட செய்தியை கேட்டாலும்..தாங்கமுடியாமல் ஓவென்று கதறிவிட்டாலும்…
அடுத்து உடனடியாக சுதாரிக்க…என்ன எது என்று விசாரித்து தெரிந்துகொள்ளும் ..அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு…இழப்பை ஈடுகட்டும் பக்குவத்தை வளர்த்துகொண்டாலே போதும் எல்லாம் கடந்துவிடலாம்