
தேவையான பொருள்கள்:
புதினா – 1 கட்டு
சின்ன வெங்காயம் – 4 (விரும்பினால்)
கொத்தமல்லி – சிறிது (விரும்பினால்)
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 3
காய்ந்த மிளகாய் – 1
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணை – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
புதினாவை, இலைகளை மட்டும் ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம் தாளிக்கவும்.
இஞ்சி, புதினாவைச் சேர்த்து லேசாக வதக்கவும்.
மிக்ஸியில் வதக்கிய கலவை, உப்பு, புளி, உரிந்த சின்ன வெங்காயம், கொத்தமல்லித் தழை சேர்த்து கெட்டியாக அரைத்து உபயோகிக்கவும்.