
முன்பு அறிவிக்கப்பட்ட ஏழு அதிசயங்கள் அனைத்தும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்தவைகளாக இருந்தன. இந்த அதிசயங்களில் எகிப்தின் பிரமிடு மட்டுமே இப்போது உள்ளது. இந்த உலக அதிசயங்களை கிரேக்க எழுத்தாளர் ‘ஆன்டிபேட்டர்’ என்ற தனி நபர் ஒருவராகவே தேர்வு செய்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இப்போதைய காலகட்டத்தின் அடிப் படையில் உலகின் புதிய 7 அதிசயங்களை தேர்வு செய்வதற்காக புதிய கருத்துக் கணிப்பு உலகம் தழுவிய அளவில் நடத்தப்பட்டது.
![]() |
தாஜ்மகால் |
இதற்கான முயற்சிகளை சுவிட்சர்லாந்து நாட்டை பூர்வீகமாக கொண்ட கனடா நாட்டவரான ‘பெர்னாட் வெப்பர்’ தொடங்கினார். யுனெஸ்கோ அமைப்பு இந்த வாக்கெடுப்புக்கு கண்டனம் தெரிவித்தது. உலக அதிசயங்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பது சரி அல்ல என்றும் கூறியது. ஆனாலும், உலகின் புதிய 7 அதிச யங்களை தேர்வு செய்வதற்காக உலக அளவில் இணையதளம் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் வாக்கெடுப்பு நடந்தது.
![]() |
இயேசு நாதர் சிலை |
உலகம் முழுவதிலும் இருந்து 10 கோடி பேர் இணையதளம் (www.new7wonders.com/en/) மூலம் ஆன்லைன் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களித்தனர். இந்தியாவிலுள்ள தாஜ்மகால், மதுரை மீனாட்சி கோவில், குதுப்மினார் உள்பட பல கட்டடங்கள் இப்போட்டியில் இடம் பெற்றன. இவற்றில் தாஜ்மகால் உள்ளிட்ட இருபத்து நான்கு கட்டடங்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. உலக அதிசயங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் கடந்த ஆண்டு (18-01-2011) நடந்தது. அப்போது ஏழு அதிசயங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவை:
1. இந்தியாவின் தாஜ்மகால்
2. சீனப் பெருஞ்சுவர்
3. ஜோர்டானின் பெட்ரா
4. பிரேசிலின் ரியோ டிஜெனீரோ நகரில்
மலை உச்சியில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை
5. பெரு நாட்டின் மச்சு பிச்சு
6. மெக்சிகோவின் மயன் கட்டடங்கள்
7. ரோம் நகரின் கொலேசியம்
நவீன ஏழு அதிசயங்களில் ஐரோப்பாவில் இருந்து இடம் பெற்றிருப்பது ரோம் நகரின் கொலேசியம் மட்டும்தான். இந்த ஏழு அதிசயங்கள் அறிவிக்கப்பட்டதும் பிரேசில், பெரு நாடுகளில் மக்கள் தங்கள் நாடுகளைச் சேர்ந்த அதிசயங்கள் அறிவிக்கப்பட்டதை ஆடிப்பாடி கொண்டாடினார்கள்.