Header Banner Advertisement

புதிய புதிய தேடல்களில் வாழ்க்கை


www.villangaseithi.com

print

சரியான..பொருத்தமான நட்புகளை உறவுகளை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுக்காதது நமது தவறாககூட இருக்கலாம்..

அப்படியே நம்மாள் கண்டறிய முடியாமல் தேர்ந்தெடுத்து..பழகி பின்னர் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் சரியில்லை…நமது பொருளுக்காகவும் உழைப்புக்காகவும்..சுயநலமாகதான் பழகியுள்ளார்கள் என்பது தெரியவந்தால்

அதற்காக மன உளைச்சல் அடையவேண்டியது ஏன்… அப்படி மன உளைச்சல் அடைவது நமக்கு நாமே மேலும் மேலும் தீங்கிழைத்து கொள்வது போன்றுதான்..யாராவது தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுகொள்வார்களா…

இதன் மூலம் சுயநலமாக அன்பில்லாமல் பழகியவர்களுக்கு வெற்றியைதான் தேடிதருகிறீர்கள்…

எப்பொழுது..எந்த நிமிடம் அந்த அன்பு பொய்மையானது என்பதை உணர்கின்றீர்களோ…அந்த நிமிடமே நாம் சுயநலமாக இல்லாதபட்சத்தில் நம் மனதைவிட்டு மறைந்தேவிடும்… எதிரில் பார்த்தால்கூட சட்டென்று ஞாபகபடுத்திகொள்ளாத அளவிற்கு மறந்தேயல்லவா போகும்…

சற்று தனக்குத்தானே சுயபரிசோதனை செய்து பாருங்கள்..உங்களிடமும் சிறிய சுயநலம் மறைந்திருக்கலாம் அது நிறைவேறாதபட்சத்தில் எதிராளியின் சுயரூபம் தெரியவரும்போதுதான் ஆற்றாமையின் வெளிப்பாடாக வேதனையுறுதல்…

இந்த உலகமே ஒன்றுக்கொன்று எதோ ஒரு ரூபத்தில் சுயநலமாகதான் சுழன்று கொண்டிருக்கின்றது… வாழும் ஒவ்வொருவருமே தான் வாழவேண்டும்… மகிழ்ச்சிவேண்டும்.. நிம்மதி வேண்டும்.. பொருள் வேண்டும்.. அதற்காக எதையாவது செய்து நிறைவேற்றிக்கொள்ளவேண்டும் என்றுதான் ஓடுகின்றார்கள்..

சிலரது ஆசைகள் நிறைவடைகின்றது.. சிலரது தாமதமடைகின்றது… ஒருத்தரது ஆசை நிறைவேற நாம் ஒரு காரண காரணியாக இருந்ததை எண்ணி பெருமித பட்டுகொண்டு.. வெற்றியடைந்தவரை மனதார வாழ்த்திவிட்டு அடுத்த வேலையை தொடர்வோம்.. அதற்காக மன உளைச்சல் அடையதேவையில்லை…

நன்றாக உண்டு உறங்கி..ஆசுவாசமடைந்து எல்லாம் மறந்து தமது அடுத்த தேடுதலை தொடர்வோம்..புதியதாக… புதிய புதிய தேடல்களில் வாழ்க்கை சுவாரசியமடையும்… ஒரு எதிர்பார்போடு வாழ்க்கை சுழலும்…

கடந்ததையே எண்ணியிருந்தால் நிம்மதியை எந்த விலை கொடுத்தும் வாங்க இயலாது… தம்மைதாமே புணரமைத்து கொள்வது ஒன்றே வழி