
புதிதாக திருமணமான மணப்பெண்கள் மிகச்சுலபமாக அந்த அவஸ்தையில் சிக்கிக்கொள்கிறார்கள். அதற்கு பெயர் கூட அப்படிதான் வைத்திருக்கிறார்கள். ‘ஹனிமூன் சிஸ்டைடிஸ்’ என்பதுதான் அதன் பெயர். கொஞ்சம் புரியும்படி சொல்வதென்றால் ‘யூரினரி இன்பெக்க்ஷன்’ எனலாம். இது புதுமணப் பெண்களுக்கும், நீண்ட கால இடைவெளிக்குப் பின் உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கும் ஏற்படுகிறது. அதிலும் அதிகம் பாதிக்கப்படுவது புதுப்பெண்கள்தான்.

ஏன் இப்படி? என்ற கேள்வியோடு மருத்துவர்களை அணுகினால் அவர்கள் ஏராளமான விளக்கம் கொடுக்கிறார்கள். நமது மண்ணை வளப்படுத்துவதற்காக மண்புழுக்கள் மற்றும் சில பாக்டீரியா போன்ற உயிரினங்களை இயற்கை உருவாக்கியிருப்பது போல், மனித உடலிலும் வாய், பிறப்புறுப்பு போன்ற சில இடங்களில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இவைகள் ஒரு காவலாளியைப் போல நோய்க்கிருமிகள் உடலுக்குள் போய்விடாமல் பாதுகாக்கின்றன. தீமை செய்யும் பாக்டீரியாக்களை இவைகள் உள்ளே அனுமதிப்பதில்லை.
அங்கே தீமை செய்யும் பாக்டீரியாக்களை தடுக்க யாரும் இல்லை. அதனால், தீமை பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதை வழியாக சுலபமாக நுழைந்து சிறுநீர்ப்பையை அடைகின்றன. அங்கு அவைகளுக்கு சாதகமான சூழல் இருப்பதில்லை. எனவே, அமிலம் போன்ற ஒன்றை தொடர்ந்து சுரக்கின்றன. இந்த அமிலம்தான் சிறுநீர் பாதையில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதனைத்தான் ‘நீர்க்கடுப்பு’ என்கிறோம். இது எரிச்சல் மட்டுமல்லாமல் பல்வேறு பாதிப்புகளை பெண்ணுக்கு தருகிறது.
சரி, இந்த தேனிலவு அவஸ்தை ஆணுக்கு ஏற்படாத என்றால், ஏற்படும் மிக அபூர்வமாக..! அதற்கு காரணம் சிறுநீர் பாதையின் அமைப்புதான். பெண்ணின் சிறுநீர்ப்பாதை அதிகபட்சமாக 2 அங்குல நீளம்தான் இருக்கிறது. ஆணுக்கோ 10 அங்குல நீளம். இதனால் தீமை பாக்டீரியாக்கள் ஆணின் சிறுநீர்ப்பையை அடைவது இயலாத காரியமாகிவிடுகிறது. அதனால் ஆண் இந்த அவஸ்தையிலிருந்து தப்பி விடுகிறான்.
அதன்பின் தீமை பாக்டீரியாக்கள் அங்கு வரும்போது அதை விரட்டியடிக்க அங்கே நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதில்லை. எனவே கிருமிகள் சட்டென்று தொற்றிக்கொள்கின்றன.இதனால்தான் புதிதாக திருமணம் ஆன பெண்கள் அடிக்கடி இந்த அவஸ்தையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
இந்த அவஸ்தை வராமல் தடுப்பதற்கு உடலுறவு முடிந்தவுடன் சிறுநீர் கழித்துவிட்டு பிறப்புறுப்பை சுத்தப்படுத்திவிடுவது ஒரு வழி. மற்றொன்று நிறைய நீர் அருந்துவது, காபி, டீ, எலுமிச்சை சாறு போன்றவற்றை தவிர்ப்பது போன்றவை ‘ஹனிமூன் சிஸ்டைடிஸ்’ வராமல் தடுக்கும். அதையும் மீறி வந்துவிட்டால் வேறுவழியில்லை டாக்டரை பார்த்துவிட வேண்டியதுதான்.