
வித – விதமான புத்திர தோஷங்கள் இருக்கின்றன.
இவை அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள பலரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் அது தெரியும்.அவற்றை பார்ப்போம்.
1.சர்ப்பசாபத்தால்( சர்ப்ப தோஷம் – நாக தோஷம் -பாம்பு தோஷம் ,ராகு- கேது )ஏற்படும் புத்திர தோஷம்
2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
7.பத்தினிஅல்லது ( ஸ்திரி) சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
8.மந்திர சாபம்,பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
9.தர்ம தேவதை சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
——————————————————————–
ஜாதக ரீதியாக பித்ரு தோஷத்தினால் புத்திர தோஷம் !
சூரியனுடைய அஷ்டவர்க்கத்தில் வியாழன்
இருக்குமிடத்திலிருந்து 5 ஆம் இடத்தில் சனியினுடைய
பரலுமிருந்தால் பித்துரு சாபத்தினால் புத்திர தோஷம்
(குழந்தை பிறந்து இறக்கும் )ஏற்படும்
இதற்கு சாந்தி
ராமேஸ்வரம் சென்று தீபஹோமம் ,தீபதர்ப்பணம் ,
அன்னதானம் ,பசுதானம் ,விஷ்ணுவின் சன்னதியில்
திலோதானம் (எள்ளு அன்னம் பிரதாசம் )விநியோகம்.
——————————————————————————
ஜாதக ரீதியாக பிரேத சாபத்தால் சந்தான தோஷம்
புத்திர ஸ்தானத்தில் சனியோ – சூரியனோ அல்லது
இருவருமோ இருந்து 7 ஆம் இடத்தில் தேய்பிறை
சந்திரன் இருந்து ,லக்கினத்தில் அல்லது 12 ல் குரு
அல்லது ராகு இருந்தால் பிரேத சாபத்தால் சந்தான
தோஷம் ஆகும்.,
லக்கினத்தில் சனியும் 5 ல் ராகுவும் ,8 ல் சூரியனும்
12 ல் செவ்வாயும் இருந்தால் பிரேத சாபம் ஆகும் .,
ஜாதகத்தில் ஸ்தானாதிபதி 5 ல் இருந்து சனியும்
,சுக்கிரனும் 5 ல் இருந்தாலோ அல்லது பார்த்தாலோ
அல்லது 5 க்குடையவனுடன் சேர்ந்தாலோ அல்லது
பார்த்தாலோ ,புத்திர காரகன் குரு பரல் குறைய பிரேத
சாபம் உண்டாகும் .,
அஷ்டவர்க்க ரீதியாக :
5 குடையவன் அஷ்டவர்க்கத்தில் ,லக்கினத்திற்கு 5 ஆம்
மிடத்திற்கும்,8 ஆம் இடத்திற்கும் சனியின் பரல்
கிடைத்து -லக்கினத்திற்கு செவ்வாயின் பரல் கிடைத்து
8 ஆம் இடத்திற்கு குருவின் பரல் கிடைத்திருந்தால்
புத்திர தோஷம் .,
5 குடையவன் அஷ்டவர்க்கத்தில் ,லக்கினத்திற்கு பாப
கிரகங்களின் பரல்கள் மாத்திரம் கிடைத்து ,12 ஆம்
இடத்திற்கு சூரியனின் பரல் கிடைத்து 8 ஆமிடத்திற்கு
5 க்குடையவனின் பரல் கிடைத்திருந்தாலும் ,பிரேத
சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படும் .,
இதற்கு சாந்தி :
விஷ்ணு சிரார்த்தம் – மகா ருத்திர ஜெப ஸ்நானம் ,
இரும்பு பாத்திரம் தானமாக வழங்குதல் ,தில ஹோமம்,
அரச மரம் சுற்றுதல் ,சாந்தான ,கோபால ,மந்திர ஜெப
ஹோமங்கள் செய்யவும் .,
_________________________________________________
ஜாதக ரீதியாக
சர்ப்பசாபத்தால்( சர்ப்ப தோஷம் – நாக தோஷம் -பாம்பு தோஷம் ,ராகு- கேது )ஏற்படும் புத்திர தோஷம்
ஓர் ஜாதகத்தில் – 5 க்குடையவனோ அல்லது புத்திர
காரகனோ (குரு ) இராகு ,கேதுக்களுடன் சேர்ந்திருந்தால்
அதற்கு சர்ப்ப தோஷம் என பெயர்.,அல்லது 5 ஆம்
இடத்திலேயே இராகு அல்லது கேது இருந்தால் அதுவும்
சர்ப்ப தோஷம் .,
சர்ப்பம் – இராகு விஷமுள்ளது
நாகம் – கேது விஷமில்லாதது
5 குடையவன் அஷ்டவர்க்கத்தில் லக்கினத்திற்கு 5 ஆம்
இடத்திலும் ,லக்கினாதிபதி இருக்கும் ராசிக்கும் ,
செவ்வாய் உடைய பரலும் கிடைத்து ,6 குடையவன்
பரலும் கிடைத்திருந்தால் சத்ரு உபாதையினால்
( மாந்திரீக பிரயோகம் ) சந்தானதோஷம் ஏற்படும் .,
_____________________________________________
ஜாதக ரீதியாக யாரெல்லாம் தந்தை தாய்க்கு கிரியை செய்ய மாட்டான் ?
5 குடையவன் அஷ்டவர்க்கத்தில் லக்கினம் சர ராசியாக
இருந்து கேந்திரங்களில் சூரியன் ,சந்திரன் இருந்து
அவர்கள் இருக்கும் இடத்திற்கு சுப கிரகங்களின் பரல்கள்
கிடைக்கா விட்டால் முறையே ,பிதா மாதாக்கள்
இறந்தவுடன் தகன கிரியை ஜாதகன் செய்ய மாட்டான் .,
————————————————————————–
ஜாதக ரீதியாக மாத்ரு சாபம் – தோஷம்
லக்கினாதிபதி பாப கிரகங்களுடைய வீட்டிலிருந்து
சந்திரன் பலஹினமடைந்து 4 குடையவன் 5 லிருந்து
சனி,செவ்வாயின் சேர்க்கையோ ,பார்வையோ
பெற்றால் ,மாத்ரு தோஷத்தால் சாபம் ,
8 குடையவன் 5 ல் இருந்தாலோ ,சந்திரன் அல்லது
4 குடையவன் 6,8,12 ல் இருந்தால் மாத்ரு சாபத்தால்
புத்திர தோஷம் ஏற்படும் .,
இதற்குசாந்தி :
சேது ஸ்தானம் ,காயத்ரி ஹோமம் ,பசும் பால் நிரம்பிய
பாத்திர தானம் அரச மரம் சுற்றுதல் 28 ஆயிரம் தடவை
தினம் 583 சுற்று x 48 நாள் சுற்றி முடிந்த பின்
தோஷம் நிவர்த்தி
——————————————————————————
ஜாதக ரீதியாக தர்ம தேவதை புத்திர தோஷம் !
9 குடையவன் 5 லிருந்து ,5 குடையவன் 8 லிருந்து
1,6,12 ல் ராகு இருந்தால் தர்ம துரோகம் செய்ததால்
புத்திர தோஷம் ,
9 குடையவன் நீசம் அடைந்து 12 குடையவன் 5 ல்
இருந்து ,இவர்களில் யாராவது ஒருவரோடு செவ்வாய்
அல்லது இராகுவோடு சேர்ந்திருந்தால் தர்ம
துரோகத்தால் புத்திர தோஷம் உண்டாகும் .,
இதற்கு சாந்தி :
காமதேனு தானம் ( பசு தானம் ) ,சொர்ண தானம் ,அன்ன
தானம் ,சத்திய நாராயணா விரதம் ( பௌர்ணமி விரதம்)
அத்துடன் திங்கட் கிழமை விரதமும் இருக்க வேண்டும் .
——————————————————————————
ஜாதக ரீதியாக ஸ்திரீ தோஷத்தால் புத்திர தோஷம் ,
5 குடையவன் அஷ்டவர்க்கத்தில் ,லக்கினத்திற்கு
5 ஆம் இடத்திற்கு சுக்கிரன்னுடைய பரல் கிடைத்து ,
லக்கினத்திற்கு 8 ஆம் இடத்தில் 7 குடையவனின்
பரலும் கிடைத்தால் பூர்வ ஜென்மத்தில் ஓர் ஸ்திரியை
பலாத்காரம் செய்ததினால் புத்திர தோஷம் .,
இதற்கு சாந்தி :
இதற்கு சாந்தியாக 5 கன்னிகைகளுக்கு விவாகம்
செய்து வைக்க வேண்டும் அல்லது பசு ,சிசு ,உதவி
ஒரு மண்டலம் செய்யலாம் .,
———————————
5 குடையவன் அஷ்டவர்க்கத்தில் லக்கினத்திற்கு 2 ஆம்
இடத்தில் பாப கிரகங்களின் பரல் இருந்து
லக்கினத்திற்கு 8 ஆம் இடத்தில் 7ஆம் மிடத்தில் பரல்
இருந்து லக்கினத்திற்கு 5 ஆம் இடத்தில் பாப
கிரகங்களின் பரல் இருந்தால்
பூர்வ ஜென்மத்தில் ஓர் ஸ்திரியை பலாத்காரம் செய்து
கர்ப்பம் ஏற்பட ,அதை சேதம் செய்தது ( கர்ப்பம் கலைக்க
செய்தது ) ஆக இரு தோஷத்தால் சந்தான தோஷம்
ஏற்படும் .
இதற்கு சாந்தி :
லெட்சுமி நாராயணா பிரதிமை ( உருவ சிலை )தானம்
செய்தல் ,சொர்ணம் ,பஞ்சலோகம் ,தாமிரம் அல்லது
வெள்ளி இவற்றால் செய்து கொடுக்கவும் .,
இது முடியாதவர்கள் 21 ஏகாதசி திதிகளில் சுத்த
உபவாசம் இருந்து துவாதசி அன்று லெட்சுமி நாராயணா
பூஜை செய்யவும் .,
————————————
5 க்குடையவன் அஷ்டவர்க்கத்தில் ,லக்கினத்திற்கு
7 ஆம் இடத்தில் ,சுக்கிரனுடைய பரல் கிடைத்திருந்து
லக்கினத்திற்கு 5 ஆம் இடத்திற்கு – 8 க்குடையவனின்
பரலும் கிடைத்திருந்தால் .,
பூர்வ ஜென்மத்தில் துர் எண்ணத்துடன் ஆனந்தமான
தம்பதிகளை பிரித்து வைத்த சாபத்தினால் புத்திர
தோஷம் ஏற்படும் .,
இதற்கு சாந்தி :
தம்பதிகளுக்கு நகைகள் தானம் செய்தல் ,சய்யா தானம் ,
சயனதானம் ,கட்டில் மெத்தை தானம் செய்யவும் .,
____________________________________________________
ஜாதக ரீதியாக ஒருவருக்கு பெண் குழந்தைகளே பிறக்க காரணம் ?
5 குடையவன் அஷ்டவர்க்கத்தில் ,லக்கினத்திற்கு 5 ஆம்
இடத்தில் ,சந்திரன் ,சுக்கிரன் ,புதனுடைய பரல்களிருந்தால்
ஜாதகனின் மனைவி அழகு உள்ளவளாக இருப்பதோடு ,
ஜாதகனுக்கு பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கும் .,
பூர்வ ஜென்மத்தில தன் குடும்பத்துடன் சண்டையிட்டு
பூர்வீகத்தை விட்டு வேறு இடம் சென்று வாழ்தல் பூர்வீக
தோஷத்தால் ஏற்படும் புத்திர தோஷம் ஆகும் .
————————————————————————————————————-
ஜாதக ரீதியாக யாருக்கு புத்திரனே பிறக்காது ?
வியாழனுடைய அஷ்டவர்க்கத்தில் 5 ஆம் இடத்தில்
8 க்குடையவனின் பரல் மாத்திரம் கிடைத்திருந்தால்
புத்திர நாசம் அல்லது புத்திரனே ஏற்படாது .
__________________________________________________
இந்த தோஷம் எப்படி செயல்படுகின்றது?
குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்து போவது, பாசமுள்ள பிள்ளைகள் பிறந்து வளர்ந்து இளைஞர்,இளம் பெண்ணாக இருக்கும்போது திடீரென இறந்து போவது;
பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் தள்ளிப்போவதால் காலங்கடந்து கல்யாணம் நடப்பது,
திருமணம் முடிந்து சில காலத்திற்குள்ளாகவே வாழாவெட்டியாக பெற்றோர் வீட்டிற்குத் திரும்புவது;
மூளை வளர்ச்சியின்றி குழந்தை பிறப்பது. சரி!
_______________________________________________
எந்த காரணங்களால் இந்த புத்திர தோஷங்கள் உருவாகின்றன?
முற்பிறவியில் பெற்ற தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும்,அவர்களை வேதனைப்படுத்தியதாலும்,
அவர்களின் கடைசிக்காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்படுவது பித்ரு அல்லது பிதுரு சாபம். இதனால் இப்பிறவியில் தன் தந்தையரோடும் தன் பிள்ளைகளோடும் ஒத்துப்போக முடியாது.
எப்போதும் ரத்த உறவுகளான அப்பா மற்றும் பிள்ளைகளால் அவமானமும்,வேதனையும் தினசரி நடவடிக்கைகளாகும்.
சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களைத் தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக்கொள்வதாலும்,சகோதரர்களைக் கொடுமைப்படுத்துவதாலும் ஏற்படுவது சகோதர சாபம்.அந்த சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படுவது.
சொத்துப்பிரச்னையில் தாய்மாமனை அவமானப்படுத்தியும்,சண்டை போட்டும் தாய்மாமன் சாபத்தால் ஏற்பட்ட புத்திரதோஷம்.
இந்த சாபத்தால் தாய்வழிப்பகையும்,புத்திரர்கள் பகையும் அவமானமும் ஏற்படும்.பெண் பிள்ளைகள் வாழாவெட்டியாவதும்,விவாகரத்து ஆகி வாழ முடியாமல் தவிப்பதும் இந்த சாபத்தால் ஏற்படுகின்றது.
சாதுக்கள்,மகான்களையும் சிவனடியார்களையும் அவமானப்படுத்துவதால் ஏற்படுவது பிராம்மண சாபம்.
இந்த சாபத்தால் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பது,மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகள் பிறப்பது,ஊமை,குருடு,செவிடு போன்ற குறையுள்ள குழந்தைகள் பிறப்பதும் ஒரு வித ஆனால் கடுமையான புத்திர தோஷம். மனைவியைக் கொடுமைப் படுத்துவதாலும், மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு வைப்பாட்டி வீடே கதி என இருப்பதாலும்,
பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி குடும்பத்தை விட்டுப் பிரிவதாலும், மனைவியின் மனம் கொதித்து அந்த சாபத்தால் ஏற்படுவது பத்தினி சாபம்.
இதனால், மனைவி மக்களால் அவமானப்படுதலும்,பண்டாரம்,பரதேசியாகி பிச்சை எடுத்தலும், கடைசிக்காலத்தில் தன்னைக் கவனிக்க ஆளில்லையே என வருந்துதலும், குடும்பத்தோடு இருந்தாலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோய் அனாதையாக இறந்து போகுதலும் ஏற்படும்.
மந்திர சாபம்,பிரேத சாபம் இவற்றால் ஏற்படும் புத்திர தோஷம் என்பது மாந்தீரிகர்களைத் தேடிப் போய் நமக்கு வேண்டாதவர்களுக்கு பில்லி சூனியம் வைப்பதும்,
குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருப்பதும் ஆகும். இந்த சாபத்தால் மருத்துவத்துக்குப் புலப்படாத நோய்கள் உருவாகுவதும்,
சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழிப்பதும்,குடும்பம் விருத்தியில்லாமல் இருப்பதும், தொழில் நட்டம், தொழில் அமையாமலிருப்பது,பிள்ளைகளால் ஏற்படும்
ஊதாரித்தனம்,துஷ்ட குணமுள்ள பிள்ளைகளால் வரும் பிரச்னைகள் போன்ற பலன்கள் ஏற்படும்.
______________________________________
இந்த புத்திர தோஷத்தை நீக்கிட பொதுவான பரிகாரம் என்ன? எப்படிச் செய்வது?
குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்யலாம்.வியாழக்கிழமை திருச்செந்தூரில் அன்னதானம் செய்யலாம்.
எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம்.
குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் ஒரு வருடம் வரை அல்லது ஆயுள் முழுவதும் செய்துவரலாம்.
உடல் நிலை சரியில்லாத போதும கஷ்டங்கள் வரும் போதும் தான் நமது உறவுகளின் மதிப்பு தெரிய வரும்!
நமது பாவத்தை நாம் தான்சுமக்கிறோம்.அதுபோல,நமது பரிகாரத்தை நாம்தான் நேரடியாகச் செய்ய வேண்டும்.
எல்லா புகழும் இறைவனுக்கே! வாழ்க வளமுடன்!