
மனிதனின் முதல் தேவை அன்புதான் என்பதை உணர்ந்த தெரசா, தொழு நோயாளிகளுக் கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சேவையை விரிவுபடுத்தினார். தொழு நோயாளிகளுக்கு என்று ‘ப்ரேம் நிவாஸ்’ இல்லம் தொடங்கினார். அன்னையின் தொண்டு இந்தியாவோடு நின்றுவிடவில்லை. ஆஸ்திரேலியா, வெனிசுலா, கொலம்பியா, ஜோர்டான், ஏமன், ரோம், பொலிவியா ஆகிய நாடுகளிலும் கிளை விரித்திருக்கிறது.
இந்திய அரசு அவருடைய நினைவாய் தபால் தலை வெளியிட்டிருக்கிறது. 1980-ல் ‘பாரத ரத்னா’ விருது வழங்கிக் கவுரவித்தது. அன்னை தெரசாவின் பணியைப் போற்றும் உலக அமைதிக்கான நோபல் பரிசு 1979-ல் வழங்கப்பட்டது. வாட்டிகன் நகரம் ‘புனிதர்’ பட்டத்தை வழங்கியுள்ளது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இப்படி,தமது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மற்றவர்களின் நலனுக்காகவே செலவிட்ட அன்னை 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் நாள் மரணமடைந்தார்.
தனது வாழ்நாள் முழுவதையும் ஏழை மக்களுக்காகவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அர்பணித்தவர் அன்னை தெரசா. இதற்காக அவரது சேவையை பாராட்டி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது சேவையை பாராட்டி அவரது நினைவு தினத்தை ஒட்டி அவருக்கு வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் அவருக்கு 2016-ல் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார் ,