Header Banner Advertisement

பெங்காலி ஸ்வீட் செய்முறை


001

print

தேவையான பொருள்கள்:

பசும்பால் – 1 லிட்டர்
எலுமிச்சம் பழம் – 1/2
சர்க்கரை – 400 கிராம்
கோவா – 50 கிராம்
மைதா – 25 கிராம்

செய்முறை:

ஒரு லிட்டர் பாலில் பனீர் தயாரித்து, உதிர்த்துக் கொள்ளவும்.

இந்த உதிர்ந்த பனீருடன் மைதா மாவைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து ஒரே அளவாக 15 உருண்டைகளாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு உருண்டையையும் சுமார் 4 செ.மீ நீளமகாவும், 1 1/2 செ.மீ அகலமாகவும் உருட்டி வைத்துக் கொள்ளவும். (கடைகளில் இதன் வடிவத்தைப் பார்த்திருப்போம்.)

சர்க்கரையுடன் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி, கொதிக்கும்பொழுது 2 டேபிள்ஸ்பூன் பாலை விடவும். இதனால் சர்க்கரையில் இருக்கும் அழுக்குகள் நுரைத்துக் கொண்டு மேலே வரும். அவற்றை நீக்கிவிடவும். (எப்பொழுதும் சர்க்கரையை சுத்தப்படுத்த இதுவே வழி.)
இப்போது கொதிக்கிற பாகில் ஒவ்வொரு உருண்டைகளாக, மெதுவாகப் போட்டு மேலும் அரை மணி நேரம் கொதிக்க விடவும்.

கீழே இறக்கியபின் ரோஸ் எசன்ஸ் சேர்த்து, ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் வைத்திருக்கவும்.

கோவாவை கேரட் துருவியில் துருவி எடுத்துக் கொள்ளவும்.

ஃப்ரிட்ஜிலிருந்து சம்சம்’மை வெளியே எடுத்து, பாகிலிருந்து ஒவ்வொரு சம்சம்’மாக எடுத்து கோவாத் துருவலில் புரட்டி, ஒரு தட்டில் அடுக்கிவைக்க வேண்டும்.

மீண்டும் ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்திருந்து உபயோகிக்கலாம்.