
எல்லாப் பெண்களுக்குமே குறிப்பிட்ட சில நாட்களில் சிறிதளவு வெள்ளைப்படுதல் இயற்கையே. பெரும்பாலும் மாத விலக்கு வருவதற்கு முன் மூன்று நாட்கள் வெள்ளைப்படுகிறது. இதுவொரு யுத்தத்தின் வெளிப்பாடுதான்.
ஒரு உயிரை உருவாக்கி வளர்க்கும் கர்ப்பப்பையின் நுழைவு வாயிலாக இருப்பது யோனிதான். அதற்குள் எந்த நோய்த் தொற்றும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கெடுதலான கிருமிகளை உள்ளே நுழையவிடாமல் தடுக்கிறது; ‘லேக்டோ பாஸில்லஸ்’ என்ற பாக்டீரியா. இது யோனியின் உள்புறத்தில் முழுவதுமாக பரவி நின்று உள்ளே நுழையும் நோய் கிருமிகளை தடுக்கிறது. இந்த பாக்டீரியா கர்ப்பப்பையை பாதுகாக்கும் ராணுவம்.
இந்த ‘லேக்டோ பாஸில்லஸ்’ என்ற பாக்டீரியா ராணுவம் சில சமயங்களில் பாதிப்படையும் விதமாக ஏதாவது நோய் தொற்று ஏற்பட்டுவிடும். அது கொஞ்சம் சோர்ந்துவிட்டால் போதும், உடனே கெடுதல் ஏற்படுத்தும் கிருமிகளும் பூஞ்சைகளும் உற்சாகம் கொண்டு யோனிக்குள் நுழைந்து விடும். அப்படி உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்து போரிட்டு மாண்டுபோகும் பாக்டீரியாக்களே ‘வெள்ளைப்படுதல்’ என்ற பெயரில் வெளிவருகிறது.
பெண்ணின் யோனி மற்றும் கர்ப்பப்பையின் வாய்ப் பகுதிகளில் இருக்கும் சுரப்பிகள் சுரக்கும் சளிப் போன்ற திரவமே வெள்ளைப்படுதலுக்கு காரணம். இரண்டு வகை காரணத்திற்காக வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது.
இரண்டாம் காரணம், மிக அதிகமான அரிப்பும், நுரை நுரையாக வெள்ளைப்படுதலும் வருவதைக் குறிக்கும். இது யோனியில் தங்கியிருக்கும் ‘டிரைகொமானஸ்’ என்ற கிருமி மூலம் ஏற்படுகிறது. பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளாதது, சுத்தமற்ற சுகாதாரமற்ற உடலுறவு மூலமும் இந்தக் கிருமிகள் யோனிக்குள் நுழைந்து விடுகின்றன.
பெண்ணுக்கு மட்டுமே வெள்ளைப்படுதல் என்பது ஏற்படும் என்றாலும், கூட கணவன்-மனைவி இரண்டு பேருமே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். வெள்ளைப்படுதலால் உடலுறவுக்குப் பின் கணவருக்கும் ஆணுறுப்பில் அரிப்பு, எரிச்சல் ஏற்படக்கூடும். மீண்டும் கணவனிடமிருந்து மனைவிக்குள் கிருமிகள் நுழையக்கூடும். அதனால் கணவன் மனைவி இருவருமே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.