Header Banner Advertisement

பெண்களுக்கான ஸ்பெஷல் மது !


MGM

print
யாராவது ஒழுங்காக இருந்தால் நம்மாள்களுக்கு பிடிக்காதே, உடனே அவர்களையும் கெடுத்துவிட கங்கணம் கட்டிக் கொண்டு துடிப்பார்கள். ஆண்கள்தான் கெட்டு சீரழிந்து போய்விட்டார்கள்.

பெண்களாவது ஒழுங்காக இருக்கிறார்களே என்று கொஞ்சம் சந்தோஷப்பட்டால் அவர்களையும் சீரழிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வந்துவிட்டன. .

சினிமாவுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அள்ளிக் கொடுத்து, அள்ளிக் கொடுத்து குடிப்பதை ஒரு சாதாரண நிகழ்வு போல் மாற்றிய நிறுவனங்கள், இப்போது பெண்களுக்கு தனி உரிமை என்ற தாக்கத்தை சொல்லி அவர்களையும் குடிக்க வைக்க புதிய வழிமுறையை கண்டுபிடிக்கின்றன. அதன் ஒரு பகுதிதான் பெண்களுக்கான பீர். இது கெடுதல் இல்லாத நல்ல பீர்.

மதுவகையில் ஒன்றான பீரை நிறைய பேர் மதுவகையில் சேர்ப்பதில்லை. பீரில் ஆல்கஹாலின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அது உடலுக்கு கெடுதல் செய்யாது, மாறாக உடலுக்கு நல்லது செய்யும் பானம் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மருத்துவ நிபுணர்களும், உணவியல் வல்லுநர்களும் இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்வதில்லை.

இது ஒரு மாயைதான். மதுபானங்களுக்கு என்னென்ன குணங்கள் உண்டோ அத்தனையும் பீரிலும் உண்டு. இந்தியாவைப் பொருத்தவரை, வடஇந்தியாவை சேர்ந்த பெண்களிடையே பீர் குடிக்கும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. மிகப் பெரிய நகரங்களில் பள்ளி மாணவர்கள் கூட பீர் குடிக்கிறார்கள், இதற்கெல்லாம் அடிப்படை காரணம் பீர் கெடுதல் இல்லை என்ற தவறான சித்தாந்தம்தான்.

இந்த நிலையில் கெடுதல் செய்யாத ஆல்கஹால் இல்லாத பீரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உணவியல் நிபுணர்களுக்கு ஏற்பட்டது. அதற்கு பயோ-டெக்னாலஜி என்ற நவீன தொழில்நுட்பம் கைக்கொடுத்தது. இந்த பீரில் கொஞ்சம் கூட ஆல்கஹால் இல்லை. அதனால் எவ்வளவு குடித்தாலும் மயக்க உணர்வு, போதை போன்றவை ஏற்படாது.

பார்லி, மாவுப் பொருட்கள், முசுக்கொட்டைக் காய் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டே இந்த பீரை தயாரிக்கிறார்கள். பெண்கள் விரும்பி குடிக்கும் வகையில் இது தயாரிக்கப் பட்டிருப்பதால் இதற்கு பெயரும் ‘லேடி பேர்டு பயோ-பீர்’ என்று பெண்கள் சம்மந்தப்பட்ட பெயரையே வைத்திருக்கிறார்கள்.

சாதாரண பீர்கள் கொழுப்புச் சத்துகளை அதிகரிக்கும். ஆனால் இந்த பீர்கள் கொழுப்பு சத்தினை சேர விடாமல் தடுக்கிறது. இதில் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது, அதனால் அல்சரைக் குணப்படுத்துகிறது.

வயதான ஆண்களுக்கு ஏற்படும் மூட்டு வலியையும் தடுக்கிறது. இப்படி ஏகப்பட்ட பயன் இருப்பதால் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பயன்படுத்தலாம் என்கிறது கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.