Header Banner Advertisement

பெண்களே! இயற்கையான முறையில் கருத்தரிக்க சூப்பர் டிப்ஸ்


www.villangaseithi.com

print

குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும், யார் தான் பிள்ளை செல்வம் வேண்டாம் என்பார்கள், ஏனென்றால் தாய் என்ற சொல்லுக்கு மதிப்பு தருவதே குழந்தைகள் தான்.

முன்காலத்தில் 10 குழந்தைகளுக்கு மேல் இயற்கையாக கருத்தரிப்பு முறையில் பெற்றெடுக்கும் தாய்மார்கள் இருந்தார்கள்.

அதற்கு காரணம் அவர்கள் சாப்பிடும் ஆரோக்கியமான உணவு வகைகள் மட்டும் தான். அந்த முறையை இன்றும் பின்பற்ற வேண்டுமா இதோ உங்களுக்கான எளிய டிப்ஸ்!

  • உங்களின் உடல் பருமன், நீங்கள் இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பை குறைத்து விடுகிறது. இதனால், சரியான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டு உடல் எடை மற்றும் பி.எம்.ஐ அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • காபி மற்றும் காஃபைன் கலப்புள்ள பானங்களை அதிகமாக உட்கொள்வதால், இது பெண்கள் மத்தியில் கருவளத்தில் எதிர்மறை தாக்கம் உண்டாக காரணமாக இருக்கின்றது. எனவே, ஒருநாளுக்கு 200 மில்லிகிராம் அளவுக்கு அதிகமாக காஃபைன் உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • மாதவிடாய் சுழற்சியை சரியாக கணக்கிட்டு வர வேண்டும். ஏனெனில் இந்த சுழற்சியில் நடுவே கரு வலிமையாக இருக்கும். எனவே இந்த நாட்களின் போது தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் இருக்க வெண்டும்.
  • அதிக மன அழுத்தம் கருவளத்தை குறைக்க செய்கிறது. எனவே மனதிற்கு அமைதியை தரக்கூடிய தியானம், யோகா போன்ற பயிற்சிகளை ஈடுபாடுடன் செய்து வாருங்கள்.
  • துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விட்டு, ஆரோக்கிய உணவுகளான நட்ஸ், தானியங்கள், பழங்கள், நெய் போன்றவற்றை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு விட்டமின் சி, ஃபோலிக் அமிலம், ஜின்க் போன்ற சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம், இவை கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்க செய்யும்.