
‘‘நெய் கனிந்து இருளிய கதுப்பின்
கதுப்பின, மணி வயிற்கலாபம்
பரப்பி பளவுடன் மயின் மயில்
குளிக்கும் சாயல், உயங்கு நாய்
நாவின் நாள் எழில் அசைஇ
வயங்கிழை ஊரிய அடியின்,
ஈந்து நிலம் தோயும் இரும்பிடி
தடக்கையின் சேர்ந்து உடன்
செரிந்த குரங்கின் மடமான்
நோக்கி வாழ்தல் விரலியர்’’ – என்கிறது சிறுபாணாற்றுப்படை சங்க இலக்கிய வரிகள் பெண்ணின் அழகை ஆராதிக்கிறது.
இந்த சங்க வரிகளுக்கு ‘எண்ணை பூசிய இருண்ட கூந்தலை மயில்தோகை போல் பரப்பிடும் அளவிற்கு அடர்த்தி கொண்டவன், மயில் போன்ற நளின நடை, நாயின் நாக்கு போன்ற மென்மையான பாதம், யானையின் துதிக்கை போன்ற தொடை கொண்டவள், மான் விழியாள், பிரகாசமான நெற்றியுடைய அழகு மங்கை’ என்பது பொருள்.
‘‘ஆயிதழ் உண் கண் அலர் முக்தாமரை
தாள் தாமரை தோள் தமனியக்
கயமலர் தம் கைப்பதுமம் கொங்கைக்
கயமுகை செவ்வாய் ஆம்பில்
செவ் நீர்த் தாமரை’’ – என்கிறது சங்க இலக்கியமான பரிபாடல்.
இந்த சங்க வரிகளுக்கு, ‘மலர்ந்த தாமரையாம் அப்பெண்ணின் மதிமுகம். கை மட்டும் அல்லாது கால்களும் கூட தாமரையாம்.’ நீராடச் சென்ற பெண்கள் குழாமை இப்படி வர்ணிக்கிறது பரிபாடல்.