
பேசுவது ஒரு கலை…. ஒரு அழகு… சில சமயங்களில் வெற்றிக்கான முதலீடு.. பெரும்பாலான காரியங்களை சாதித்துவிடவும் முடியும்…
என்ன பேசுகின்றோம்..ஏது பேசுகின்றோம்..இதனால் எதிராளியின் மனநிலை என்ன ஆகிறது.. என்ன பின் விளைவுகள் உண்டாகும் ..என்பதை பற்றி சிறிதும் யோசிக்காமல்
சிலர் பேசிகொண்டே இருப்பதனால்தான்… தோல்விகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவேண்டி உள்ளது.. மன உளைச்சளும் உண்டாகிறது…
நம்மிடம் இருக்கும் திறமையை…ஆக்க வழியிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்..அழிவு வழியிலும் கொண்டு சென்றுவிடலாம்
அறியாமையினாலும்..சில சமயங்களில் தெரிந்தே…அல்லது அகங்காரம் பிடிவாதம் ஈகோ போன்ற காரணங்களாலும் வறட்டு கௌரவத்தாலும்..வீன் தம்பட்டங்களாலும் தேவையற்ற வார்த்தைகளை பேசி எல்லாவற்றையுமே கெடுத்துக்கொள்வோம்…
இதுவே எல்லாவகையான பாதிப்புகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிடுகின்றது…
சற்று கட்டுபாட்டுடன்…நிதானமாக யோசித்து சமயோஜிதமாக அளவாக பேசி இங்கே ஏகபட்ட காரியங்கள் சாதிக்கப்படுகின்றன
அதனை சிலர் காக்கா பிடிக்கறாங்க..ஐஸ் வைக்கறாங்க..கூஜா துக்கறாங்க என்று ஏளனமாக பேசுவர்..
உண்மையில் நம்மால் முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் அங்கே மேலோங்கி இருக்கும்… அடுத்தவரது வெற்றியை நன்மையை ஏகதளமாகஒருவர் பேசினாலே அது அவரது இயலாமை… ஏக்கம் பெருமூச்சைதான் குறிக்கும்…
இந்த அருமையான பேச்சுகலையின்மூலம் எவருக்கும் எதற்கும் தீங்கில்லாமல்.. யாருக்கும் கெடுதல் நினைக்காமல்..நியாயமாக நமக்கு ஆகவேண்டியதை சாதித்துகொள்வதில் தவறில்லை..
எப்படிபட்டவர்களையும்..பேச்சின் மூலம் வெற்றிகொள்ளமுடியும் எப்படிபட்ட காரியங்களையும் சாதித்துவிடமுடியும்… கொஞ்சம் திறமைதான்… நிதானம்.. நல்யோசனை..அவ்வளவே..
கையில் இருக்கும் வெண்ணையை விட்டுவிட்டு நெய்க்கு அலைவதுபோல்… பேசதெரியாமல்… இதை எப்படி சாதிக்கலாம் என்று எங்கெங்கோ தேடி அலைவதுதான் வாடிக்கையாக இருக்கின்றது…
மகிழ்ச்சியோ..துக்கமோ..அன்போ..செல்வமோ..நட்போ.. காதலோ பேச்சோ… அமைதியோ..எதுவாகினும் அளவோடு இருக்குமாறு பார்த்துக்கொள்வது என்றுமே நன்மைதான்…
எதுவுமே.. குறைவாகவோ..அளவுக்கதிகமாகவோ.. சுத்தமாக காட்டபடாமலோ இருத்தல் மன உளைச்சலை தரக்கூடியது.. ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது… அழிவையும் தரக்கூடியது..
அதுக்காக ஸ்கேல் வச்சி அளந்துக்கனுமா..தராசு வச்சி எடைபோட்டுக்கனுமா..லிட்டர்ல அளந்து கொட்டனுமா ,,,ன்னுல்லாம் வில்லங்கமா கேக்கபிடாது..
நம் உணர்வினால் உணரபடுவதைவிட வேறு யாராலும் நமக்கு நம்மைபற்றி வரையறுத்து சொல்லிவிடமுடியாது…
நம்மாலேயே உணரமுடியும்…இது அதிகம்..இது தேவையில்லை.. இது தவறு ..சரி என்று..அதன்படி செயல்படுவதே சிறந்தது…
அததான் மனசாட்சிபடி நடக்கறது ன்னு சொல்றாங்களோ என்னவோ… ஏதோ…
எதனையும் மனதில் போட்டு குழப்பிகொண்டே அமைதியின்றி இருப்பதைவிட… என்ன தோன்றுகிறதோ அதனை சொல்லித்தான் பார்த்துவிடுவோமே… ஒருவேளை தவறாக இருந்தால்கூட
மீண்டும் அந்த தவறு ஏற்படாதபடியும்… ஒரு படிப்பினையாகவும் இருந்துவிட்டு போகட்டுமே… நிம்மதியாவது மிஞ்சும்..
உங்கள் பாணியில்… வரது வரட்டும்..ஆனது ஆகட்டும் என்று இறங்கிவிடலாம்..ஒரு கை பாத்துடலாம்
அல்லது..எண்ணித்துனிக கருமம்..என்ற குறள் படி என்றுகூட வைத்துக்கொள்ளலாம்…. எப்படி என்பதா முக்கியம்…
நமக்கு நமது மனதின் சதோஷம் ஆரோக்கியம் முக்கியம்…
அதற்காக…. துணியலாம்..வேறு யாருக்கும் , எதற்கும், எவர் மனதிற்கும்.. அடுத்தவர் சொத்திற்கும் நம்மையறியாமல்கூட துன்பமோ..தொந்தரவோ ஏற்பட்டுவிடாதபடி..
அவங்களே சொல்லிட்டாங்கன்னு..எதும் வில்லங்கமா யாரும் பன்னிடபிடாது இல்லையா ..அதான் ஒரு முன்னெச்சரிக்கையாக சொல்லிவைக்கிறேன்…
என்ன நான் சொல்றது…சரிதானே…
கொஞ்சம் மாற்றிதான் பார்ப்போமே…