
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி – 1 கப்
பச்சரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மைதா – 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை, டால்டா/நெய் – தேவையான அளவு
செய்முறை:
அரிசிகள் இரண்டையும் தண்ணீரில் 3 மணிநேரம் ஊற வைக்கவும். உளுந்தையும் வெந்தயத்தையும் சேர்த்து, தனியாக ஊறவைக்கவும்.
அரிசி, பருப்பை தனித் தனியாக நைசாக அரைத்து, உப்பு சேர்க்கவும். மைதாவையும் கலந்து 6,7 மணி நேரம் எடுத்துவைக்கவும்.
பொங்கியிருக்கும் மாவில் மேலும் நீர் சேர்த்து தளர இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
தோசைக் கல் காய்ந்ததும் மாவை நடுவில் விட்டு, மிக மெல்லிய தோசைகளாகப் பரத்தவும். அடுப்பை மெதுவாக எரிய விடவும்.
எண்ணையோடு டால்டா/நெய் கலந்து, தோசையைச் சுற்றிலும், நடுவிலும் விடவும்.
ஒரு மூடியால் மூடிவிடவும். (இப்போது தோசைக்கு மூடி கடைகளில் கிடைக்கின்றன.)
நன்கு ரோஸ்ட் ஆக வெந்ததும் எடுத்துப் பரிமாறலாம். திருப்பிப் போடத் தேவை இல்லை. கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு தோசைக்கு மாவு விடும் முன்பும் சிறிது நீர் தெளித்தோ அல்லது ஈரத் துணியால் கல்லைத் துடைத்துவிட்டுச் செய்தால் சரியாக வரும்.
இந்த முறைக்கு தோசைக் கல் கனமானதாக இருக்க வேண்டும். இரும்புக் கல்லில் செய்தால் சுவையாக இருக்கும். நான்-ஸ்டிக் பரவாயில்லை.