Header Banner Advertisement

பேராசைகளை கொஞ்சம் தள்ளிவைத்தால்


VILLANGASEITHI

print

எப்படி பாத்தாலும்..பெரும்பாலான மனநல பிரச்சனைகள் பணத்தை அடிப்படையாக கொண்டே வருகிறது….

பணத்தை சம்பாதிப்பதிலும்… சம்பாதிப்பதில் தம்மைபற்றிய மதிப்பீடும்…

வழிமுறைகளும்… அதனில் நம்முடைய வெற்றியும்..திருப்தியும்…

கடைசியில் முக்கியமாக..அதனை பயன்படுத்துவதிலுமே நம்முடைய பெரும்பான்மையான மனநல பிரச்சனைகள் அடங்கியுள்ளது….

யோசித்து பாருங்கள்..எங்க சுத்தி எங்க வந்தாலும் கடைசியில் தேடிபிடித்து அதன் மூல காரணத்தை பார்த்தால் அங்கேயேதான் போய் நிற்கின்றது…

நான் சந்தித்த பிரச்சனைகளில் பெரும்பாலும் அதனைதான் அடிப்படையாக கொண்டுள்ளது….

முறையில்லாத வழியில் வரும் செல்வமானது….

அப்போது மகிழ்ச்சியை கொடுத்தாலும் நாளடைவில் மனதை அரித்து..

இனம்புரியாத குழப்பநிலைக்கு தள்ளிவிடுகின்றது..தனக்கு என்ன தேவை..

என்ன செய்கின்றது என்பதைகூட சொல்லமுடியாத நிலையில் பிரமை பிடித்தவர் போலாகிவிடுகின்றனர்…

காரணங்கள் பல சொன்னாலும்…கடைசியில் மூல காரணமாக அதுவே முதலிடத்தை பிடிக்கின்றது….

இந்த அற்ப காரணத்திற்காகவா நம்முடைய எல்லாவற்றையும் தொலைக்கின்றோம்…

நிம்மதி அமைதி சந்தோஷம்.. எல்லாமும் இதனாலா நம்மைவிட்டு காததூரம் செல்ல அனுமதிக்கின்றோம்…

சம்பாதிக்க நல் வழிகள் பல உள்ளன… அதில் வரட்டு கௌரவம் பார்க்கவில்லையென்றாலே போதுமே…

சோம்பேறிதனத்தை தொலைத்தாலே போதுமே…நமக்கு கிடைத்துள்ள அற்புதமான அறிவை நன்கு பயன்படுத்தினாலே போதுமே….

பேராசைகளை கொஞ்சம் தள்ளிவைத்தாலே போதுமே….

செலவழிப்பதில் நன்கு திட்டமிட்டாலே போதுமே…

வரட்டு கௌரவம் இன்றி தேவைக்கு செலவழிக்க தேவையற்றவற்றை முழுமனதோடு ஒதுக்க கற்றுகொண்டாலே போதுமே…

யாரும் திறமையற்றவர் இல்லையே… பாசிட்டிவாக எண்ணலாமே….

நம் உடலையும் மனதையும் ஆரோக்கியத்தோடு பராமறித்து நீண்ட ஆயுளோடு நிறைவாக வாழமுடியுமே…

கொஞ்சம் யோசித்து பாருங்கள் என்ன சொல்கின்றேன் என்று புரியும்…