Header Banner Advertisement

மகிழ்ச்சிகரமாக இருக்க சில வழி


www.villangaseithi.com

print

வாழ்வில் கடந்துமுடிந்த அற்புதமான தருணங்களை அசைபோடுவது..நான் சொல்லாவிட்டாலும் அதைதான் செய்வார்கள்…என்ன..அதனை அசைபோடுவது எவ்விதம் என்பதில்தான் வித்தியாசம்….

சந்தோஷ தருணங்களை நினைத்து பார்த்து… இப்போ இப்படி தனிமையில் இருக்கின்றோமே என்று மேலும் வேதனைபட்டுகொண்டு மேலும் அதிக வருத்தமைடைந்து கொண்டிருக்கின்றார்கள்..

மகிழ்ச்சிகரமாக..முகத்தில் புன்னகை ததும்ப… யோசித்து.. நிகழ்ந்தவைகளை நினைத்து புத்துணர்வடையவேண்டும் என நான் சொல்வேன்…
அந்த தனிமையே மறந்துபோகுமளவிற்கு கடந்த அந்த அற்புத தருத்திலேயே அப்போதும் இருப்பதுபோல் உள் மனதில் உருவகபடுத்திக்கொண்டு காலம் போவதே தெரியாமல் மகிழ்ந்திருக்கலாம்…

கற்பனையிலேயே… உள்மன உருவகபடுத்தலிலேயே… நாம் பிரிந்திருக்கும்…நம்மைவிட்டு விலகியிருக்கும் உறவுகளையும்.. நிகழ்வுகளையும் நம் அருகில் வரவழைத்துகொள்ள முடியும்…

வெளியில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் நாமும் பங்கேற்றுகொள்ளமுடியும்.. அந்த சந்தோஷங்களை பெற முடியும்..அதனை யாராலும் தடுக்க முடியாது… எந்த கட்டுபாடும் இல்லை… முயற்சித்து பாருங்களேன்….

இயலாத நேரங்களில் மட்டும் கற்பனை வாழ்க்கை..உள்மனதால் நெருங்கியிருத்தல்….

அதற்காக….அந்த தருணங்களை முறைபடுத்தலுக்காக.. சிறிய சிறிய யோகாசனம் மற்றும் தியான பயிற்சிகளை மேற்கொள்வதில் எந்த வகையான போரிங்கோ…கடுப்ஸோ கிடையாது…

அதனை உள்மன நெருங்கியிருத்தல் வாழ்க்கைகான திறவுகோளாக…வாயிலாக பயன்படுத்திக்கொள்ளலாம்…
மனம் அமைதியாகவும் இருக்கும்..மகிழ்வாகவும் இருக்கும்.. எத்தனை ஆண்டுகளானாலும்…

தனிமை உருத்தாது.. எப்போதும் .. எல்லோருடனும் வாழ்ந்துகொண்டிருக்கும் உணர்வே மிஞ்சும்…
என்ன தவற்றிற்காக தனிமைபடுத்தபட்டுள்ளாரோ… அந்த தவற்றை தானே உணர்ந்து திருந்தும் வாய்ப்பையும் அடைவர்

மேலும் சிறு சிறு உதவிகள் தம்மாள் முடிந்தது,, சக மனிதருக்கு உதவுதல்…

சோம்பியிருக்காமல்…துறுதுறுப்புடன் எதையாவது … உதாரணமாக தாம் இருக்கும் இடத்தை சுத்தபடுத்திக்கொள்ளல்… நல்ல புத்தகங்களை வாசித்து காட்டுதல்..மற்றவர்களோடு டிஸ்கஸ் செய்தல் போன்றவைகளும் மகிழ்ச்சிகரமாக இருக்க வழிவகை செய்யும்…

முயற்சித்து பார்க்கலாமே….