
பணம், காதல் இரண்டில் ஏதாவது ஒன்றை மையமாக வைத்து நடக்கும் திருமணங்கள் முறிவில் போய் நிற்கின்றன. அதனால்தான், ‘பணத்துக்காகத் திருமணம் செய்து கொண்டவனைப் போல் அயோக்கியனும் இல்லை. காதலுக்காக மட்டுமே கல்யாணம் செய்து கொண்டவனைப் போல் முட்டாளும் இல்லை’ என்று மேலை நாட்டு தத்துவாசிரியன் ஜான்சன் எழுதினார். பொறுப்புணர்வு, அன்பு, பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல்… மூன்றும் இருக்குமானால் மணமுறிவு குறையலாம்.