Header Banner Advertisement

மனதில் கோபம் துளிர்விட்டால்


www.villangaseithi.com

print

மனம் அமைதியற்றிருக்கும்போதும்..கோபமாயிருக்கும்போதும்.. குழப்பமாயிருக்கும்போதும்… எதிரில் பேசுபவர் ஒன்றை கூற..நாம் வேறுவிதமாக புரிந்துகொண்டு சூழ்நிலையை கலவரமாக்கிவிடுவோம்…

ஒரு தகவலாகவோ..செய்தியாகவோ கூட இருக்கலாம் அது நல்லவிதமாக..நல்ல ஒரு விஷயத்தைபற்றியதாககூட இருக்கலாம்..பெரும்பாலும் நம் மனநிலையை பொருத்து அதனை தவறாக புரிந்துகொண்டு…அவசரத்திலும் ஆத்திரத்திலும்..

நடக்ககூடாதவைகளும் நடந்தேறிவிடும்… இழப்புகளும் ஏற்பட்டுவிடும்….

பின்னர் வருந்தி..வருந்தி… ஏகபட்ட முயற்சிகள் எடுத்து..எதாவது ஏடாகூடமாகவே நடந்துகொண்டிருந்தால்..அதனால் ஏற்படும் மன உளைச்சல் நம்மை உயிரோடு கொன்றுபோடும்…

தெரியாம பன்னிட்டேன்…. அதான் கடைசி எல்லைவரை தாழ்ந்து போறனே..விட்டுகொடுக்கறனே…. பின்ன என்ன… என்று திரும்பவும் அவசரமும் ஆத்திரமும் படுவதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறோம்…

அடித்துவிட்டோம்…அதனை நாம் உணர்ந்த நொடியில்…வருந்திய நொடியிலேயே அவர்கள் வலியும் ஆறிவிடவேண்டும் என்று நினைப்பது… சுயநலம்தானே…

மற்றவருக்குடம் கொஞ்சம் நேரம் தேவைபடலாம் மன்னிப்பு கேட்டதோடு ..தன்நிலை விளக்கம் சரிவர கொடுத்ததோடு கடமை முடிந்தது…காத்திருக்க பழகவேண்டும்..பொருமை வேண்டும்…. கனி தானே கனியும்வரை காத்திருத்தல் அவசியம்..அதுவே நன்மையும்கூட

மேலும்..மேலும் அவசர ஆத்திரத்தில் தவறுகளே தொடர்கதையாகி.. வாழ்வை அழிக்கும்..உறவுகளை விலக்கும். எல்லாம் இருந்தாலும் இல்லாதவனாக்கிவிடும்… நற்பெரையும் மாற்றும்…

மனதில் கோபம் துளிர்விட்டாலும்..துளிர்விடும் நாம் மானுடம்.. அதனை குறைக்கவும் அடக்கவும் பழகுதல் அவசியம்… அதேபோல் என்னதான் நாம் சரியாக புரிந்துகொண்டதுபோல் இருந்தாலும்..நல்ல முடிவை எடுத்ததுபோல் இருந்தாலும் ..சரியான வார்த்தைகளை பயன்பாடாக பேசுவதுபோல் இருந்தாலும்…

அப்போதைய நம் மனநிலையை கொஞ்சம் கருத்தில் கொண்டு… சிரிய  நேரமெடுத்துகொண்டு…பின்னர் நம் மனநிலையை வெளிபடுத்தலாம்..