
நம்முடைய அறியாமைதான் எல்லாவற்றிற்குமே காரணமாகிவிடுகின்றது…
நிலையான சந்தோஷம் எது..நிலையற்றது எது என்பதை உணராமையினாலேயே.. பிறர்க்கும் நமக்கும் துன்பத்தை ஏற்படுத்திகொள்கின்றோம்..
இருப்பதை இல்லை என்றும்..இல்லாததை இருக்கிறதாகவும் பெரும்பாலும் நம்புகின்றோம்.. அல்லது அனுமானித்துக் கொள்கின்றோம்… அதனாலேயே மன அமைதி தொலைத்து பிறரையும் வருத்துகின்றோம்…
எந்த விஷயமாக இருந்தாலுமே சரி… உடனடி ஆத்திரம் அனுமானம் கொள்ளாமல் கொஞ்சம் தீவிரமாக அறிந்துகொள்ள தெரிந்துகொள்ள நேரம் செலவிடலாம்… அந்த நேரத்தில் நிச்சயம் மனம் அமைதிகொண்டுவிடும்..
அது பிரச்சனையாகவே இருந்தாலும் வேறு வழியில் பார்த்துகொள்ளலாம் என மனம் யோசிக்க தொடங்கும்… அந்த அவகாசம் நிதானம் போதுமே…
மனிதமனம் ஒரு குரங்கு என்றுகூட சொல்ல கேள்விபட்டிருக்கின்றோம்… அது உண்மைதான்… குரங்குகள் எவ்வாறு மனம்போனபோக்கில் எதையாவது செய்து கொண்டிருக்கிறதோ… அதுபோல நம் மனமும்..எதையாவது எப்பொழுதும்..தேவையற்ற..தேவையான என பாகுபாடின்றி சிந்தித்துகொண்டே இருக்கும்…
நாம் மட்டும் மனிதனாக பிறந்துவிட்டு ஏன் மனதைமட்டும் குரங்காக வைத்துகொள்ளவேண்டும்… கடிவாளமிட்டு மனித மனமாகவே வைத்துகொள்ளலாமே…
அதற்கு ஒரு காரணமும் உண்டு..மனம் வேறு உடல் வேறு அல்ல.. மனம் என்னவெல்லாம் சிந்திக்கிறதோ அதற்கேற்ப உடலும் மாற்றமடையும்.. பாதிப்புகளை கொடுக்கும்..
உதாரணமாக கோபபட்டு பாருங்களேன்..உடல் வியர்க்கும்..நரம்புகள் புடைக்கும்..கண்கள் சிவக்கும்.. சந்தோஷபட்டு சிரித்து பாருங்களேன் முகம் பிரகாசிக்கும் அழகாகும்..கண்களில் ஆனந்தம் தெரியும்..
சோ…. மனதை எந்தளவு கட்டுபாட்டோடு செப்பனிட்டு கொள்கின்றோமோ…அந்தளவு உடலும் ஆரோக்கியமாகவே இருக்கும்..உடல் ஆரோக்கியத்தை விரும்பாதவர் எவர்…