
சில சமயங்களில்….மனது என்னவோ மாதிரி அமைதியில்லாம.. இருக்கும்.பதட்டமாக நகம் கடிப்பதும்..யார் எது சொன்னாலும் என்ன நிகழ்ந்தாலும் கவனமின்றியும்…எந்த வேலையிலும் கான்சன்ட்ரேஷன் இன்றியும்…இருக்கும்
சில சமயங்களில் சம்மந்தமில்லாமல் எதையாவது பேசிகொண்டு என்ன பேசினோம்..எதனை செய்தோம் என்பதை மறந்தும் இருக்கும்.. தூக்கமில்லாமல் தவிப்பர்…
அதிகமாக சாப்பிட்டுக்கொண்டோ..கண்களை எப்போதும் அலைபாய விட்டுக்கொண்டோ… எதையோ எதிர்பார்த்து காத்துகொண்டிருப்பதுபோல் இருக்கும்…
இந்த மாதிரியான அறிகுறிகள் பெரும்பாலும் ஒரு சில மனநல பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்தான் …என்றாலும் எளிமையாக பெரும்பாலும் இந்த காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறேன் பின்பற்றி பார்க்கலாமே…
நாம் எப்பொழுதாவது எதாவது தவறுகள் செய்திருப்போம்.. அதனை யாரும் அறியார் என்றும் உறுதியாக நம்பியிருப்போம் அல்லது யாரையாவது தொந்தரவோ..அல்லது அவர் அறியாவண்ணம் எதாவது கெடுதல் புரிந்திருப்போம்…
நம்மை நம்பியிருப்பவருக்கு நம்பிக்கை துரோகமோ யாரிடமாவது சிரித்து பேசிக்கொண்டே குதர்க்கமாக பின்னால் அவருக்கு குழியை வெட்டியிருப்போம்… நாமும் மானுடம்தானே எல்லாம் செய்வோம் அதற்காக வருந்தவேண்டாம்…சரிசெய்துகொண்டாலே போதும்..
இதில் எதை நாம் புரிந்தோம் என நன்கு யோசித்து யாரும் அறியாவண்ணம் அதற்கான பரிகாரத்தை அல்லது நல்ல தீர்வை செய்துவிட்டு பாருங்கள்…இந்த அறிகுறிகள் இருந்த இடம் தெரியாமல் போய் நல்ல அமைதியும் நிம்மதியும் ஏற்பட்டு அற்புதமாக தூக்கம் வரும்…
இதற்காக எந்த மருத்துவரிடமும் சென்று ஆழ்மனதை அறிந்து செலவு பன்ன தேவையில்லை…நம் ஆழ்மனதை நாமே அறியமுடியும் . நாமே யோசித்தால் நம்மிடமே விடை இருக்கும்..மருத்துவம் இருக்கும்….
இதற்கும் தீரவில்லை என்றால் மட்டும் யாரையேனும் அனுகலாம்…