Header Banner Advertisement

மனம் தளராமல் கொஞ்சம் முயற்சித்தால்


www.villangaseithi.com

print

வாழ்நாளில் எத்தனையோ பிரச்சனைகளை எதிர்கொள்கின்றோம் அதனை களைவதற்கு முயற்சிகள் செய்கின்றோம்.. பாதிக்கப்படுகின்றோம்.. சில சமயங்களில் பெரிதாககூட..

யாராக இருந்தாலுமே தனது பிரச்சனையை தீர்க்க எதாவது ஒரு வழியில் முயற்சிகள் செய்துகொண்டேதான் இருப்பர் . . யானையின் காலில் நசுங்கும் சிறு நாக்குபூச்சிகூட… நசுங்குவதற்கு முன் தன் சிறு தலையை உயர்த்தி எதிர்ப்பை காட்டிவிடும்..

எந்த முயற்சியும் செய்யாமல் சோம்பி கிடப்பவர் ஒரு சிலரே.. முயற்சிக்கவே முடியாமல் அயர்ந்துபோய் அப்செட்டாகி இருப்பவரும் உள்மனதில் எதாவது பிடிகிடைக்காதா என்ற யோசனையிலும் நப்பாசையிலும் எதிர்பார்ப்பிலும்தான் இருப்பர்

நாம் முயற்சிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியடைந்துவிடும் என்று சொல்வதற்கில்லை.. நமது பிரச்சனைகள் தீர்க்கபட்டுவிடும் கட்டாயம் என்று எந்த உறுதியும் சொல்வதற்கில்லை..

ஆனாலும்..

அந்த முயற்சியானது..நம்பிக்கையானது… எப்படியும் வெற்றியடையவேண்டும் என்ற உத்வேகமானது… அவசியமானது.. நம்மை இன்னும் சிறிதுகாலம் நம்பிக்கையோடும்..நிம்மதியோடும்..ஆரோக்கியத்தோடும் வாழவைக்கின்றது…

பிறகு தோல்வியே தழுவினால்கூட… கொண்ட உற்சாகம் தன்னம்பிக்கை நம்மை மீண்டும் செலத்துகிறது… சிறிது மனம் தளர்ந்தாலும் சமாளித்துகொண்டு மீண்டும் முயற்சியை செய்யவோ..அல்லது வேறு முயற்சிகளில் முழு மூச்சோடு பழசை மறந்து ஈடுபடவோ முழு உதவியாகவே இருக்கின்றது…

அதனால்தான் சொல்கிறேன்..ஆமா அதான் தெரிஞ்சிபோச்சே.. நடக்காதுன்னு.. வாய்ப்பே இல்லைன்னு..என்று தனக்குதானே முடிவெடுத்து தளர்ந்து போகாமல்…

எந்த பிரச்சனையாக இருந்தாலும் மனம் தளராமல் நாக்குபூச்சிபோல் கொஞ்சம் முயற்சியாவது செய்வோம்.. சிறிதாவது நிம்மதியும் சிறிதுகாலமாவது சிறு நம்பிக்கையும் நம் வாழ்வை எதிர்பாராவிதமாக புரட்டிபோடலாம்….

நம்பிக்கைதானே வாழ்க்கை….