
ஒரு ஆமை தன்னை தானே அடக்கிகொண்டு தற்காத்துக்கொள்ள தனது உடலுறுப்புகள் முழுவதும் தன்னுடைய ஓட்டுக்குள் அடக்கிகொள்வதுபோல்….
முழுமைபெற்ற மனிதன் தனது மனதை அடக்கியாள முடியும்… எண்ணங்களைத்தான் சொல்கின்றேன்…
நானும் முயற்சி செய்யறேன்…இப்படிதான் இருக்கனும்ன்னு ஆசைபடுறேன்…பட் முடில..என்று சொல்பவர்களுக்குத்தான் சொல்கின்றேன்….
உடனே அடுத்த கேள்வி..முழுமைபெற்ற மனிதனாவது எப்படி.. அங்கதானே பிரச்சனை என்பர்… அதொன்றுமில்லை…
சில மந்திர வார்த்தைகள்… அதாவது தான் என்னவாக , எப்படி ஆகவேண்டுமென ஆசைபடுகின்றோமோ அதற்குரிய வார்த்தைகள்… அவரவர் மத நம்பிக்கைக்கு ஏற்றவாறு.. திரும்ப..திரும்ப உச்சரித்துக்கொண்டே மனதாலும் உருப்போட்டுக்கொண்டே… திரும்ப திரும்ப அதே நிலையில் மனதை லயித்திருக்க செய்வதுதான்…
ஏன் நமக்கு விருப்பமான பாடலோ..திரைப்படமோ கானும்போது சுற்றம் மறந்து லயித்திருப்பதில்லையா..விருப்பமானவர்களோடு உரையாடிக்கொண்டிருக்கும்போது நேரம்போவது தெரியாமல் ஈடுபட்டுகொண்டிருப்பதில்லையா
அதேபோல்தான்… நம்மை நாமே புணரமைத்துக்கொள்ள நெறிபடுத்திக்கொள்ள..வாழ்வை மாற்றியமைத்துக்கொள்ள விரும்பும்போது அதை நிச்சயம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்
அவ்விதம் முயலும்போது..சிந்தனையை எப்பொழுதும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போம்.. கட்டுப்பாட்டில் இல்லா மனம்தான் அடுத்தவரது அடிமையாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கும்…
சுயமாக சிந்திக்கும்..தீர்மானிக்கும் சக்தியை இவ்விதம் அடைவதே முதல் கட்டம்… அதற்கு அடுத்து..நமது விதியை நாமே தீர்மானித்துக்கொள்வோம்… நமது விதியை நமது விருப்பம்போல் நாமே தீர்மானிக்கும்போது வேறு என்ன குறைகள் வாழ்வில்… முயற்சிப்போம்