
எங்கேயாவது சிலர் கூட்டமாக கூடியிருந்தால் நம்மையறியாமலேயே அங்கே போய் நிற்போம் அது என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆவல்..
எவ்வளவு அவசர வேலையாக இருந்தாலும்.. நிற்கமுடியாத சூழ்லையாக இருந்தாலும் ..மனம் அங்கேயேதான் நிற்கும்..என்னவாக இருக்கும் என்று…
அதுபோலதான் வதந்தி என்று தெரிந்தாலும்…மற்றவர்களை பற்றிய குறைகள்..சிலரது ஆதங்கம்தான் என்றாலும்… அந்த கதையை மிக ஆர்வமாக கேட்டுகொள்வோம்.. அவர்களே மறந்தாலும் நாமே அப்புறம் என்னாச்சு என்போம்..அல்லது ஆர்வமாக எதிர்பார்ப்போம்…மனித இயல்பு..
அப்படி என்னதான் பிரச்சனை அவர்களுக்குள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம்மையறியாமலேயே நம்மை உந்தி தள்ளும்…
அது நல்ல விஷயங்களோ..சரியில்லாத விஷயங்களோ..எதுவாக இருந்தாலும் உடனடியாக தெரிந்துகொள்ளவேண்டும்…
அதனால் நம்க்கென்ன.. தெரிந்துகொள்கின்றோம் அவ்வளவுதானே.. என்று நினைக்கலாம் அது அப்படி அல்ல.. சில விஷயங்கள் நம்மையறியாமல் நம் மனதில் புகுந்து நம்மை ஆட்டிவைத்துகெண்டிருக்கும்..
அதன் வெளிப்பாடுகள் வேறு விதமாக இருக்கும்… என்னன்னே தெரில ஒரே அலுப்பா இருக்கு..அழனும்போல இருக்கு.. யார்கிட்டயும் பேச பிடிக்கல.. வேலைல கவனம் இல்ல.. எங்கயாச்சும் போகனும்போல இருக்கு டயர்டா இருக்கு என்று கூறுவதெல்லாம் உள்மனதில் இருக்கும் சில விஷயங்களின் தாக்கம்தான்
எப்போதும் வதந்தி பேசுகின்றவர்கள்… பிறரைபற்றி குறைகூறிகொண்டே இருப்பவர்கள்.. இவர்களை கொஞ்சம் தள்ளியே வையுங்கள்… அவர்கள் பேசும் விஷயம் எவ்வளவுதான் ஆர்வ்த்தை துண்டினாலும்.. கட்டுபடுத்துங்கள் அது நமக்கு தேவையில்லாதவை..
சும்மா பொழுது போக்குதானே…தெரிந்துகொள்ளல்தானே என்று பேசும் விஷயங்கள்..பெரிய ஆபத்துகளை பாதிப்புகளை பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றது..
சிலருக்கு..எங்கேயாவது கண்ட குறிப்பிட்ட காட்சிகள்.. வார்த்தைகள்… விஷயங்கள் மனதை விட்ட அகலுவதில்லை.. அதன் பின்னனிகள்..காரண காரியங்கள் எதுவுமே ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் … குறிப்பிட்ட காட்சி..விஷயம் பயம் மனதை அறித்துகொண்டே..பாதிப்புகளை கொடுத்துகொண்டேதான் இருக்கும்…
நல்ல விஷயங்களில் கவனம் வைத்தல்…வேலையில் கவனமாக இருத்தல்..சுய சிந்தனை… தன்னை தன் குடும்பத்தை சார்ந்த விஷயங்களை அதிகம் சிந்தித்தல்… என்றும் நலமாக இருக்கும்..