
உலகில் யாரும் தனி மனிதனாக வாழ்ந்துவிட முடியாது….
ஒரு சமுதாயத்தில்…
எதோ ஒரு குடும்பத்தில் அங்கத்தினராகதான் வாழமுடியும்…வாழ்கின்றோம்…..
நம்முடைய கருத்து எப்படி நமக்கு மிக சரியானதோ.. அதேபோலவே மற்றவர்களது கருத்தும் அவர்களை பொருத்தவரை மிக சரியானதே…
அதனால் யாரையும்..எவரது கருத்தையும் குறைத்து மதிப்பிடுதலோ… இழிவாக பேசுதலோ வேண்டாமே…
யாருடைய விருப்பமும் ஒத்துழைப்பும் இன்றி யாரையும் திருத்த முயலவேண்டாமே….
பெரும்பாலும் அது பிரச்சனையிலும் அதனை தொடர்ந்த மன உளைச்சலிலும்தான் போய் நிற்கின்றது…
யாருக்கு எப்போது தன் தவறு புரிகின்றதோ.. அவசியபடுகின்றதோ..
அப்போது தானே திருத்திகொள்வார்கள்…
அதுவரை நடப்பது நடக்கட்டும் நமது வேலையை மட்டும் கவனமாக பார்த்து நம் பாதையை சரிசெய்வதில் கவனம் வைப்போமே…
நம்முடைய மன குழப்பத்திற்கும்…டென்ஷனுக்கும் பெரும்பாலும் முக்கிய காரணியாக இருப்பது மனித உறவுகள் சரியாக இல்லாததுதான் யாருமே எப்போதும் மூடிய மனதுடன் மாற்று கருத்துக்களை..
செயல்களை ஏற்க மறுத்து நமக்கு நாமே வேலிகள் போட்டுகொண்டு…தன்னைசுற்றி ஒரு வளையத்தை தோற்றுவித்து…
அந்த வளையத்துக்கப்பால் எதுவுமே நல்லதில்லை சரியில்லை என்று எளிதில் முடிவெடுத்து விடுகின்றோம்
இயற்கையாகவே தான் தனது என்ற அகங்காரமும் சேர்ந்துகொள்கின்றது..
இப்படி இருக்க மனித உறவுகள் எவ்வாறு சரியாக இருக்கும்..
எதிரில் இருப்பவரும் தன்னைபோன்ற மனிதர்…
அவரது கருத்து அவருக்கு என்பதை எப்போது புரிந்துகொள்கின்றோமோ அன்றிலிருந்து
..அந்த கனத்திலிருந்து..
எல்லாமே நிம்மதியாகவும் அழகாகவும்..
அமைதி நிரம்பியதாகவும் தென்படும்…
முயற்சித்து பாருங்களேன்…