Header Banner Advertisement

மனைவி சொல்லே மந்திரம்.!


www.villangaseithi.com

print
நீங்க அப்பப்போ என்கிட்ட கதை சொல்லுவீங்க. அற்புதமான கற்பனையா இருக்கும். இனிமே அதை என்கிட்ட சொல்றது மட்டுமல்ல, இதோ பேப்பரும், பேனாவும் எடுத்து வெச்சுருக்கேன். நீங்க என்ன என்ன எழுதணும்னு நினைக்கி றீங்களோ அத எல்லாத்தையும் எழுதுங்க. அத புத்தகங்களா போடுவோம் அப்படினு ஆலோசனை சொன்னாங்களாம். அவருக்கும் உற்சாகம் வந்துட்டுது. மனச்சோர்வு நீங்கி எழுத ஆரம்பிச்சாராம். முதல்ல அவரு எழுதினது ஒரு நாவல். அதுதான் இப்போ மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாக கருதப்படுகின்ற கருஞ்சிவப்பு எழுத்து அப்படிங் கின்ற நாவல். ஆக மனைவி யோட ஆலோசனை அவர உற்சாகப்படுத்திருக்கு.

அமெரிக்க ஜனாதிபதி ஆன்டோன் ஜாக்சன், அவருடைய மனைவி அவருக்கு செஞ்ச உதவி ரொம்ப மகத்தானதாம். திருமணத்துக்கு முன்னாடி அவர் எழுத படிக்க தெரியாதவரா இருந்தாராம். இவருக்கு கல்விய போதிச்சு, அறிவு வளர வெச்சு, அவருடைய சிந்தனையை தூண்டி, கடைசியில் அவரு அமெரிக்க ஜனாதி பதியா ஆகுற அளவுக்கு அவருடைய மனைவி துணையாக இருந்தாங்க.

அதேபோல அதிர்ச்சியான நிகழ்ச்சிகள் ஏற்படும் போதெல்லாம் சர்ச்சில் தன்னுடைய மனைவி கிட்ட போயி ஆலோசனை கேட்பாராம், அறிவுரை கேட்பாராம். அந்த கலந்துரை யாடலுக்கு பிறகு அவருக்கு புதுத்தெம்பு வருமாம். அதுக்குபிறகு வந்து அவரு பணியைத் தொடங்கு வாராம்.மோட்டார் மன்னன் அப்படின்னு பாராட்டப்படுற ஹென்றி போர்டு ஹோல் முதல்ல அவர் ஆராய்ச்சியில் தொடர்ந்து தோல்விகளே கிடைச்சுட்டு இருந்தது. இத கண்டு பிடிக்கிறேன், அத கண்டுபிடிக்கிறேன்னு கடைசியில் தோல்விலதான் முடியுமாம்.
அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க, நண்பர்கள் எல்லாம் அவர வந்து அரை பைத்தியம்னு கிண்டல் பண்ண ஆரம்பிச் சுட்டாங்க. அவருக்கு சோர்வு வந்து விட்டது. ஆனா, அவரு மனைவி பாத்தாங்க. அவருடைய சோர்வ அகற்றுவதற்கு நல்ல நம்பிக்கையான ஆலோசனையெல்லாம் சொன்னாங் களாம்.

சோர்வடை யாதீங்க.! நிச்சயமா உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க! அப்படின்னு தூண்டிகிட்டே இருந்தாங் களாம். அந்த உற்சாகம்தான் அவருக்கு கடைசியில் வெற்றிக்கு வழி பண்ணிருக்கு. அந்த உற்சாகத்தின் அடிப்படையில்தான் கடைசியில் ஹென்றி மோட்டார் கார் கண்டு பிடிச்சாராம்.