Header Banner Advertisement

மன அழுத்தத்திலிருந்தும் மனக்குழப்பத்திலிருந்தும் விடுபட மருந்துகள் அவசியமா ?


www.villangaseithi

print

மன அழுத்தத்திலிருந்தும்…மனக்குழப்பத்திலிருந்தும் விடுபட மருந்து மாத்திரைகளோ..வேறு உபாயங்களோ தேவையில்லை என்பதே பலரது கருத்து…

எளிய வழிகளாக…நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள்.. எண்ணங்களில் சிறு மாறுதல்கள்.. (Change in life style and Attitude change) உண்ணும் உணவு வகைகளில் சிறிதளவு மாற்றம்..

தினமும்… திறந்த வெளியில் வாக்கிங் போதல்… எளிய உடற்பயிற்சிகள்… ரிலாக்சான பொழுது போக்குகள்… சில யோகா மற்றும் தியானபயிற்சிகள்… அவ்வளவே..

போதுமே… நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமுமாக.. மகிழ்வோடு வாழலாமே… கேட்பதற்கு மிக எளிதாக… பூ…இவ்வளவுதானா..என்று… கேட்க தோன்றும்.. (இப்படியென்றால் என்ன கேட்பவர்கள் வேறு விதம் அவர்களை தனியாக கையாளவேண்டும்)

கடைபிடித்து பாருங்கள்… படிபடிப்படியான மாறுதல்கள்.. முன்னேற்றங்களை காண்போம்.. கூடவே நமது நடத்தைகளும் மாற்றமடைந்து பிறர் மதிக்கதக்க வகையிலும்..விரும்பதக்க வகையிலும் இருக்கும்..

நம்மை நேசிக்கும் கூட்டம் அதிகரிக்கும்… நம்மை வெறுப்பவர்களின் பட்டியல் குறைந்துகொண்டே போகும்…

நாம் இன்று நாகரிக கோமாளிகளாகிவிட்டோம்… ஏன் இவ்வளவு சம்பாதிக்கின்றோம்.. இத்தனை பாடுபடுகின்றோம்.. வாழ்க்கையின் அர்த்தம் என்ன..என்னதான் எதிர்பார்க்கின்றோம் என்று யாருக்குமே புரிவதில்லை…

இன்னும் சொல்லபோனால் அதிகம் படித்து அறிவாளிகளாகவும் பெரும் செல்வந்தர்களாகவும் திகழ்பவர்கள்தாம் அதிக மன பிரச்சனைகளுக்கு ஆட்படுகின்றனர்…

கட்டுபாடின்றி உணவு மற்றும் மற்றபிற பழக்கவழக்கங்களால் .. நோய் பயம்..மரண பயம் ஏற்பட்டு வாழும்போதே வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றனர்…

எல்லோருமே வாழலாம் வாழ்க்கையை அனுபவிக்கலாம் மகிழ்வோடு நோயின்றி..அதற்கு பணக்காரன் ஏழை என்ற தகுதிகள் அவசியமற்றது…. புரிந்து வாழ்வோம்…