
ஊர் என்ன சொல்லும்… உறவினர்கள் என்ன சொல்லுவார்கள்.. அக்கம்பக்கம் என்ன சொல்லும்… என்று மற்றவர்களுக்காகவே பயந்து..பயந்து வாழ்ந்து..எதனையும் முறையாக சரியாக பயன்படுத்தாமல் வாழாமல் மன உளைச்சலில் வாழ்பவர்கள் இங்கே அதிகம்…
நல்லதோ..கெட்டதோ..எதுவாக இருந்தாலும் அதனை செயல்படுத்த முதலில் யோசிப்பது ஊர் சொல்வதைபற்றிதான்..
தனது ஆசைகள் விருப்பங்கள் இருக்கும்.. வீட்டிற்காக ஒன்று செய்துகொள்வதிலோ..தனக்காக உடையோ மற்ற அலங்காரங்களோ..பட்… ஊருக்காக பயந்தே தனது ஆசைகளை குழிதோண்டி புதைத்துவிடுவர்..
பட் உள்மனதில் அந்த ஆசையானது அவர்களுக்கே தெரியாமல் கனன்றுகொண்டிருக்கும்… இதனை காணும் யாருமே தனது உள் மனதை கேட்டுபாருங்கள்.. எத்தனை மாறுதல்களை யாருக்கும் தெரியாமல் செய்துபார்த்து சந்தோஷமடைகின்றோம்…
மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று பயந்துதான் பலர் தன் துன்பங்களைகூட உள்ளே மறைத்து வெளிப்பூச்சாக சிரித்து வாழ்கின்றனர்.. ஒருசில குடும்பங்கள் தற்கொலை செய்துகொள்வதுகூட இதன் காரணமாகதான்…
சம்பாதிக்க துப்பில்லாதவன்தான் வீட்டு பெண்களை வேலைபார்க்க அனுப்புவார்கள் என்று கூறுவார் சிலர்..பட் அங்கே பல பிரச்சனைகள் பணதேவைகள் இருக்கும்.. ஆனாலும் மற்றவர்களுக்காக வீண் பெருமையில் வாழ்ந்து வீழ்ந்து மனஉளைச்சலில் தத்தளிப்பர்…
இந்த பணம் வந்து இங்கே ஒன்றும் ஆகபோவதில்லை.. இதெல்லாம் எங்களுக்கு அவசியமேயில்லை.. என்று கேட்பவர் தன்னை கேவலமாக நினைத்துவிடகூடாதே என்று பேசுவர்.. பட் உள்ளே நிலமை வேறாக இருக்கும்…
ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்… வாழ்வில் முன்னேறாதவர்கள்..முன்னேற முயற்சிக்காதவர்கள் நமது வளர்ச்சிக்காக பொறாமைகொள்பவர்கள்..காலம்காலமாக முன்னேற்றமில்லமல் ஒரேமாதிரியான சிந்தனையில் வாழ்பவர்கள்தான் இவ்வுலகில் அதிகம்..
இவர்கள் எதனையும் உருப்படியாக செய்யமாட்டார்கள்… பட் எல்லாம் தெரிந்தாமாதிரி மற்றவர்களைபற்றி பேசுவதும்.. பெருமைபடுவதும்.. அட்வைஸ் பன்னுவதுமாக காலம் தள்ளுவர்
யோசியுங்களேன்….இந்தமாதிரியானவர்களுக்காகவா நாம் நமது வாழ்வை..சுயத்தை.. சுக துக்கங்களை மறைத்து வாழவேண்டும்
நானும் யோசிக்கின்றேன்..நீங்களும்…