
உலகின் மிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலை சமீபத்தில் டைம் இதழ் வெளியிட்டது. 2014-ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மிக்க மனிதர்களில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், ஜப்பான் பிரதமர் ஷன்ஸோன்று நீளும் இந்த பட்டியலில் நான்கு இந்தியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, அர்விந்த் கெஜ்ரிவால், அருந்ததி ராய், முருகானந்தம் தான் அந்த நால்வர்கள். முதலில் இருக்கும் மூவரும் பிரபலமானவர்கள். எல்லோருக்கும் தெரிந்தவர்கள். ஆனால் கடைசியாக இருக்கும் முருகானந்தம்…?
எளிமையான மனிதர். உலகம் முழுவதும் விமானத்தில் பறந்து கொண்டிருப்பவர். சாதாரண மனிதர்கள் முதல் துபாய் அரசர் அல்நைன் ஷேக் வரை பழக்கம் வைத்திருப்பவர். புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உரையாற்றுபவர் என்று அறியப்பட்ட அருணாச்சலம் முருகானந்தம், தனது நாப்கின் தயாரிப்பு இயந்திரங்களின் மத்தியில் ஒரு மூலையில் சாதாரண ஸ்டீல் டேபிள், சேரில் அமர்ந்திருந்தார். இத்தனை உயரம் தொட்டவர் என்ற எந்தவொரு அடையாளமும் அவரிடம் இல்லை. அவரிடம் கலந்துரையாடியதிலிருந்து…
![]() |
அருணாச்சல முருகானந்தம் |
பள்ளி விட்டு நின்ற பின் பல வேலைகள் செய்தேன். பட்டறை வேலை, மெஷின் டூல் ஆப்ரேட்டர், யான் விற்பனை ஏஜெண்ட், வெல்டர் என்று… வாழ்க்கை ஓடிக்கொண்டே இருந்தது. இதற்கிடையே திருமணம் வேறு. ஆனால், அதுதான் திருப்புமுனையை ஏற்படுத்தியது. என் வாழ்வில் நுழைந்த மனைவி சாந்தி மூலம்தான் என் பிறப்புக்கான அர்த்தம் தெரிந்தது.ஒருநாள் என் மனைவி வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த மரத்தில் இருந்து எதையோ எடுத்துக் கொண்டு போனாள். அதை மறைத்து மறைத்து கொண்டு போனாள்.
எனது நாப்கின்களுக்கு எனது மனைவியும் எனது சகோதரிகளும்தான் சோதனைக் கூட எலிகள். அவர்கள் எனது முதல் நாப்கினை முகத்திலேயே தூக்கி எறிந்தார்கள். இந்த நாப்கினை விட துணியே மேல் என்றார்கள்.
உலகம் முழுவதும் சானிடரி நாப்கின் தொழிலை இரண்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் தங்களின் கைப்பிடிக்குள் வைத்துள்ளன. அந்த நிறுவனங்கள்தான் 120 பிராண்டுகளில் நாப்கின்களை வெளியிட்டு வருகின்றன. அதனால் தயாரிப்பு முறையை பரம ரகசியமாக வைத்திருக்கின்றன.
செல்லூலோஸ் பஞ்சை வாங்கினால் தான் மேற்கொண்டு நாப்கினை பற்றிய ஆராய்ச்சியை தொடர முடியும் என்ற நிலை. 9-ம் வகுப்போடு படிப்பை பாதியில் நிறுத்திய நான், எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் அதற்கான மூலப் பொருட்களை ஐ.எஸ்.டி. கால் செய்து கேட்டேன்.
சைக்கிள் ஓட்டினேன்…
எனது உள்ளாடைகளில் இருந்த இந்த ரத்தம் பட்ட கறையை ஊருக்கு பொதுவான கிணற்றில் வைத்து துவைத்த போது முருகானந்தத்துக்கு பால் வினை நோய் வந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கும், எனக்கும் தவறான உறவு இருக்கிறது என்று ஊர் சொல்லத் தொடங்கியது. இதையெல்லாம் நம்பிய என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து சென்றாள்.
ஆனாலும் என் ஆர்வம் குறையவில்லை.