Header Banner Advertisement

முட்டாள்கள் தினம்…யாருய்யா கண்டுபிடித்தது?


www.villangaseithi.com

print

ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஒவ்வொரு நாள் இருப்பது போல, ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஒருவரை ஒருவர் எந்த விதத்திலாவது ஏமாற்றுவதில் குறியாக இருப்பார்கள். அவர்கள் கூறும் தகவல்களை உண்மை என்று நாம் நம்பி விடுவோம். ஆனால், அவை உண்மையல்ல என்று பின்னால் தெரியவரும் போது முட்டாள்களாகி விடுகிறோம்.

அப்போதுதான் தோன்றும்… ஓ… இன்றைக்கு ஏப்ரல் 1-ம் தேதியல்லவா? நம்மை முட்டாளாக்கவிட்டார்களே என்று எண்ணத் தோன்றும். மனதுக்குள் ஒரு புன்சிரிப்பு தோன்றி மறையும். இந்த முட்டாள்கள் தினம் ஏற்பட்டது குறித்து பார்ப்போம்.,

முட்டாள்களுக்காக ஒரு தினத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனையை முதன் முதலில் வெளியிட்டவர் ‘பாஸ்வெல்’ என்பவர் ஆவார். சூரிய வழிபாட்டிற்கும் இந்த விழாக் கொண்டாட்டத்துக்கும் தொடர்பிருப்பதாக பழைய நூல்களிலிருந்து தெரிய வருகிறது. ஆதிகுடிகளான ‘ஷெல்ட்’ இன மக்கள், சூரிய கடவுகளைக் குறித்து இதை வசந்த விழாவாகக் கொண்டாடினர். இவ்விழாவின் முக்கிய அம்சம் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து மகிழ்வதாகும்.

இப்படி முட்டாளாக்கப்படுபவர்கள் பிரான்சில் ‘ஏப்ரல் ஃபிஷ்’ என்று அழைக்கப்படு கிறார்கள். ஏனென்றால் அன்று காகிதத்தால் செய்த மீன் வடிவம் ஒன்றை ஒருவரின் முதுகில் அவருக்கு தெரியாமல் ஒட்டிவைத்து விட்டு, ஏப்ரல் ஃபிஷ் என்று கூவிக்கூவி அழைப்பார்கள். முதலில் ஏப்ரல் முதல் நாள் முழுவதும் இந்த விழா கொண்டாடப் பட்டது. மாலை வரை அவர்களை முட்டளாக்கிக் கொண்டிருந்தனர். பின்னர் நண்பகல் வரைதான் இந்த வேடிக்கைகளைச் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தனர். அதன் பிறகு முட்டளாக்க முயல்பவர்கள் முட்டாள்களாக கருதப்பட்டனர்.
இப்படியொரு பழக்கம் கனடா, இங்கிலாந்து, சைப்ரஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இன்றும் தொடர்கிறது.கிழக்கு நாடுகளில் இந்த முட்டாள்கள் தினம் கொண்டாட்டம் வழக்கத்தில் இல்லை. ஆனால், மேலை நாடுகளைப் பார்த்து நாமும் இப்போது இத்தினத்தைக் கொண்டாடு கிறோம். ஏப்ரல் முதல் நாளை அரசாங்க விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல நாடுகளில் விவாதங்கள் நடைபெற்றன.முடிவில் விடுமுறை தேவையில்லை என்று முடிவு செய்யப் பட்டது.
ஏப்ரல் 1-ந் தேதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். ஏமாற்று வதும், ஏமாற்றப்படுவதும் இன்றுதான். ஏப்ரல் 1-ந் தேதியை பெரியவர்கள் எதிர்பார்க்கிறார் களோ இல்லையோ, குழந்தைகள் பெரிதும் வரவேற்கிறார் கள். காரணம், அன்றைய தினம் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி நண்பர்கள், உடன் பிறந்தோர், பெற்றோர் என அனைவரையும் ஏமாறச் செய்து மகிழ்ச்சியில் குதூகலிப்பது குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
முட்டாள்கள் தினம் எப்படி வந்தது? என்பதற்கு பல்வேறு சுவாரசியமான வரலாற்று தகவல்கள் உள்ளன. நாம் இதற்கு முன்பு ஒரு வரலாற்று தகவல் கொடுத்துள்ளோம். இருப்பினும் இன்னொரு வரலாறு உங்களுக்காக…! பண்டைய காலத்தில் ரோமானி யர்கள் ஏப்ரல் 1-ந் தேதியைத்தான் புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்தனர்.ஐரோப்பிய நாடுகளிலும் இதுதான் நடைமுறையில் இருந்துள்ளது. இந்தநிலையில், 1562-ம் ஆண்டு கிரகோரி என்ற துறவி போப் ஆண்டவராக இருந்தார். இவர், ‘ஜார்ஜியன்’ என்ற புதிய காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார்.

அதில் புத்தாண்டு தினம் ஏப்ரல் 1-ந் தேதிக்கு பதிலாக ஜனவரி 1 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. “இனிமேல் எல்லோரும் ஜனவரி 1-ந் தேதியைத்தான் புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும்” என்று போப் கிரகோரி உத்தரவும் போட்டார்.

பல்வேறு நாடுகள் புதிய காலண்டர் முறையை ஏற்றுக்கொண்டாலும் இங்கிலாந்து போன்ற நாடுகள் அந்த உத்தரவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், புத்தாண்டு தினம் மாற்றப்பட்ட தகவல் பல நாடுகளை சென்றடையவில்லை. அந்த நாடுகளில் முன்பு போலவே ஏப்ரல் 1-ந் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடினர்.
இவ்வாறு காலண்டர் மாற்றப்பட்டு புதிய காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது தெரியாமல் பழைய முறைப்படியே ஏப்ரல் 1-ந் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடியவர்களை கேலி செய்தனர். அவர்களை முட்டாள்கள் தினம் என்று சித்தரித்தனர். காலப்போக்கில் ஏப்ரல் 1-ந் தேதி முட்டாள் தினமாக மாறியது என்பது வரலாறு. அந்த வகையில்  முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதால் யாரிடமும் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்.!