Header Banner Advertisement

முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்.?!


www.villangaseithi.com

print
  •  உலகின் மிகப்பழமையான காதல் பாடல் நான்காயிரம் வருடங்களுக்கு முன்பே யூப்ரடிஸ் – டைக்ரீஸ் நதிகளுக்கிடையே தோன்றிவிட்டது.
  • ஒவ்வொரு வேலன்டைன் தினத்தின் போதும், இத்தாலியின் வெரோனா நகரில் ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’ நாடகம் நிகழ்த்தப்படும். அப்போதெல்லாம் ஜூலியட்டுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான காதல் கடிதங்கள் வரும்.
  • கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘லவ் டிடெக்டர்’ என்ற வேடிக்கைக் கருவி காதல் உரையாடல்களின் நம்பகத்தன்மையையும் காதலின் அளவையும் குரல் ஆய்வு மூலம் வெளிப்படுத்துகிறது.
  •  ஒருவருக்கு காதல் பிறந்துவிட்டால் மனதிலும் உடலிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. மனதையும் உடலையும் அமைதியாக்குவதோடு, நரம்பு வளர்ச்சிக் காரணிகளை சில காலத்துக்கு அதிகரிக்கும். இதனால் காதலர்களின் நினைவாற்றல் அதிகமாகிறது.
  •  65 சதவிகிதத்தினர் தங்கள் தலையை வலப்பக்கமாக சாய்த்து முத்தமிடவே விரும்புகிறார்கள். காலை நேரத்தில் முத்தமிட்டுக் கொள்ளும் தம்பதிகளின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் அதிகரிக்கும் என்கிறது ஓர் ஆய்வு.