Header Banner Advertisement

மூங் மசாலா செய்முறை


001

print

தேவையான பொருள்கள்:

பச்சைப் பயறு – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்
எலுமிச்சைச் சாறு – சில துளிகள்
கொத்தமல்லித் தழை

m

அரைக்க:
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
தனியா = 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)

தாளிக்க: எண்ணெய், சீரகம், கறிவேப்பிலை.

 

செய்முறை:

பச்சைப் பயறை குறைந்தது 12 மணி நேரம் நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.

இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய், தனியா, சீரகத்தை நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கலந்துகொள்ளவும்.

மேலே, அரைத்த விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைப் பயறு என்ற வரிசையில் ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.

தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து அரை கப் நீர் சேர்த்து மூடிவைத்து நிதானமான தீயில் வேவைக்கவும்.

அடிக்கடி திறந்து கிளறிவிட்டு, தேவைப்பட்டால் மேலும் நீர் சேர்க்கலாம்.

நீர் வற்றி, பயறு நன்கு வெந்து ஆனால் உடைந்து/மசிந்து விடாமல் இருக்க வேண்டும்.

தக்காளி சேர்த்திருப்பதால் சில துளிகள் மட்டும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் தூவிப் பரிமாறலாம்.

முளைகட்டிய பயறாக இருந்தால் நலம். நான் அதில்தான் செய்திருக்கிறேன்.

கரம் மசாலா சுவை விரும்பாதவர்கள், காரத்திற்கு மிளகாய்த் தூள் அல்லது பச்சை மிளகாயை அதிகமாக உபயோகித்துக் கொள்ளலாம்.

பயறை மட்டும் தனியாக குக்கரில் வேகவிட்டு வைத்துக்கொண்டும், நீரை வடித்து, இதில் சேர்த்து வதக்கலாம்.

இஞ்சிக்குப் பதில் சுக்குப் பொடி இருந்தாலும் உபயோகிக்கலாம். எனக்குப் பிடிப்பதில்லை.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சப்பாத்தி, ரொட்டி வகைகள், நெய் சாதம்…