Header Banner Advertisement

மூலிகை மருந்துகளால் சிலருக்கு ஏன் நோய் குணமடைவது இல்லை ?


www-villangaseithi-com

print

மருத்துவத்தில் மூலிகைகளின் பங்கு முக்கியமானது. மூலிகைகளை மட்டுமே மருத்துவத்திற்கு நம்பியிருந்த காலத்தில் மூலிகைப் பற்றிய தனிநபர் ஆராய்ச்சிகள் அதிகம் இருந்தன.

சில அரிய மூலிகைகளும் அவைகளை பயன்படுத்திய விதத்தில், பெரிய நோய்களை எல்லாம் மிக சாதாரணமாக குணப்படுத்திய அதிசயங்களும் நிறைய நடந்தன.

இப்போது மூலிகை வைத்தியம் தரமில்லாமல் போனதற்கு அவை தயாரிக்கும் முறை உட்பட மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது.

அஷ்டகர்ம முறைப்படி தயாரித்தல்

இம்முறைப்படி மருந்து தயாரித்தல் என்றால், எட்டுவிதமான குணங்களை கொண்ட எட்டுவிதமான மூலிகைகளை முறையாக சேர்த்தால்தான் அந்த மருந்தால் ஒரு நோயை முழுதாக குணப்படுத்த முடியும் என்ற விதிதான்.

அவற்றில், நோயை பரவவிடாமல் தம்பனப்படுத்துதல், பிறகு நோயை வசியப்படுத்துதல், மாரண மூலிகையால் அந்த நோய்க்கிருமிகளை அழித்தல், பேதன மூலிகைகளால் கிருமிகளை பேதப்படுத்துதல், வித்துவேஷன் மூலிகைகளால் அவற்றை உடலில் இருந்து வெளியேற்றுதல் ஆகும்.

ஒரு நோய்க்கு உரிய சிறப்பு மூலிகை அந்த கிருமிகளை அழித்தாலும் மீதமுள்ள குணத்துக்குரிய பொதுவான மூலிகைகளும் அதில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை இந்த வழிமுறை வலியுறுத்துகிறது.

முக்கியமாக, தம்பனம், வசியத்துக்குரிய மூலிகைகள் கட்டாயம் இருக்க வேண்டும். அதுபோல, மாரணம், பேதனம், வித்வேசனம் இந்த மூன்றில் ஏதாவது ஒரு மூலிகை கட்டாயம் இருக்க வேண்டும். தேவையான மற்ற சில மூலிகைகளை வைத்தியர் தெரிந்து எதை சேர்க்க வேண்டுமோ அதை சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த எட்டு வித மூலிகைகளில் எதுவும் இல்லை எனில் மருந்தினால் பயனில்லை.

பத்தியம்

மூலிகை மருத்துவத்தில் கட்டாயமாக பத்தியம் இருக்கும். காரணம் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து நோயை குணப்படுத்த முடியாமல் உணவினாலோ வேறு செயலினாலோ தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்குதான் இந்த பத்தியம்.

உதாரணமாக, ஒரு பக்க தலைவலி, தலையில் நீரேற்றம், தலைக்குத்தல், கண்களில் இருந்து நீர் வருதல் போன்ற நோய்களை பரிபூரணமாக குணமடையச் செய்யலாம்.

காலையில் பீனிச தைலம் அல்லது மிளகாய் தைலம் அல்லது சீரக தைலம் இதில் ஏதாவது ஒன்றை தலையில் தேய்த்து குளித்த பின்பு, கடுக்காய் 10 கிராம், 10 மிளகு சேர்த்து கஷாயம் வைத்து சாப்பிட, 1 (அ) 2 முறை பேதியாகும். இவ்வாறு 3 நாட்கள் தொடர்ந்து செய்தால் பரிபூரண குணமாகும்.

இந்த நாட்களில் பச்சரிசி கஞ்சியும் பருப்பு துவையல் மட்டுமே உணவாக கொள்ள வேண்டும். மேலும் பகலில் தூங்குதல், வெயிலில் உலாவுதல், டி.வி. பார்த்தல் கூடாது. இப்படி கடைப்பிடித்தால் 3 நாட்களில் நிச்சயம் குணமாகும். இல்லையேல், 30 நாட்கள் மருந்து சாப்பிட்டாலும் குணமாகாது.

சரக்கு சுத்தி செய்தல்

சுத்தி என்பது மூலிகையில் உள்ள மருத்துவ குணங்களுக்கு எதிரான குணங்களை நீக்குவது.

சுக்கு, மிளகு, திப்பிலி முதல் வீரபாஷாணம் வரை எல்லா மூலிகைகளும் கடைச்சரக்குகளும் மூலத்தில் உள்ளபடி சுத்தி செய்யப்பட வேண்டும் என்பது விதி.

இப்போது சுத்திசெய்து மருந்து தயாரிக்கும் மருத்துவர்களும் நிறுவனங்களும் குறைவு.

நாட்டு மருந்துகளில் இடம்பெறும் மூலிகைகள் ஆடாதொடை, தண்ணீர் விட்டான்கிழங்கு, கீந்திற்கொடி, கொடிசம்பாலைபட்டை, சோம்பு, நிலவேம்பு, அமுக்கிறா கிழங்கு, நன்னாரி வேர் ஆகிய இவைகளை பச்சையாகவே சேர்க்க வேண்டும். ஆனால், இன்று இவைகள் காய்ந்த சரக்குகளாகவே சேர்க்கப்படுகின்றன.

இதுபோல, வாய்விளங்கம்திப்பிலி, வெல்லம், தேன், கொத்தமல்லி, ஆகியவை சேர்க்கும்போது 1 வருடத்திற்கு மேற்பட்டதாய் இருக்க வேண்டும். ஆனால், தேன் உடனடியாக சேர்க்கப்படுவதால் தயாரிக்கப்படும் லேகியங்கள் வேலை செய்வதில்லை.

மேலும், மாசிக்காய், கடுக்காய் போன்ற துவர்ப்பு மூலிகைகளை ,இரும்பில் அரைக்கக் கூடாது என்பதும் விதி. நாட்டு மருந்துகளும் நவீன மருந்துகள் போல கேப்சூலில் அடைத்துக் கொடுப்பதால் உமிழ்நீரில் கரைந்து உடனடி பலன் அளிப்பதில்லை.

இப்படி மூலிகை மருத்துவம் வீழ்ச்சியடைய பல முரண்பாடுகள் முன்போடு ஒப்பிட இப்போது காணப்படுகின்றன.

நவீன மருத்துவம் கல்வி மற்றும் அறிவியலின் துணையோடு புகழடைந்துள்ளது. ஆனாலும் சர்க்கரை நோய், இருதயநோய், இரத்த அழுத்தம் போன்ற முதுமையில் பொதுவாக வரும் நோய்களுக்கும் சாகும் வரை மாத்திரை சாப்பிட வைப்பதுதான் நவீன மருத்துவத்தின் தீர்வு. அது சரியல்ல.

அது நோயை குணப்படுத்துகிறது என்பதைவிட, நோயை சமாளிக்க ஒரு சக்தியை கொடுக்கிறது. அவ்வளவுதான்.

நோய்களுக்கான சரியான மருந்து தாவரங்களில் இருக்கிறது என நம்பி ஆய்வை தொடர்வதே ஆரோக்கியமான மருத்துவத்தின் சரியான பாதை.