
தேவையான பொருள்கள்:
புளி – சிறிய எலுமிச்சை அளவு
வெங்காயம் – 2
வெல்லம் – பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க: (வெறும் வாணலியில்)
காய்ந்த மிளகாய் – 6, 7
வெந்தயம் – 1 1/2 டீஸ்பூன்
அரிசி – 1/2 டீபூன்
தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை.
செய்முறை:
புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், அரிசியை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
அடுப்பில், வாணலியில் நல்லெண்ணெயில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, புளிநீரைச் சேர்க்கவும்.
புளிநீர் ஒரு கொதி வந்ததும் அரைத்துவைத்துள்ள பொடியைச் சேர்த்து, மேலும் 2, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
மெலிதாக அரிந்துவைத்துள்ள வெங்காயத்தில் பாதியைப் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
மீதியிருக்கும் வெங்காயம், வெல்லம் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி பாத்திரத்தை மூடிவிட வேண்டும். எப்ப திறக்கலாம்னு ஜெயஸ்ரீ சொன்னதும்தான் திறக்க முடியும்.
பத்து நிமிடங்கள் சூடான குழம்பில் வெங்காயம் ஊறியபின் திறந்து பரிமாறலாம். [டடண்டடண்டடாங்… திறந்தாச்சு!
வெங்காயத்தைப் பச்சையாகச் சேர்ப்பதுதான் இதில் சிறப்பு.
* வெல்லம் அவசியம் சேர்க்க வேண்டும். [வெல்ல டப்பா எங்கவெச்சேன்னு வழக்கம்போல மறந்துபோச்சு!
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பொங்கல், மற்றும் அரிசி உப்புமாவுக்கு நல்ல ஜோடி.
நீங்க சொன்னப்புறம் வலையில் மெந்திப் புலுசு ன்னு தேடி பாத்தேன். மீன் சேர்த்து செய்வதுதான் ஒரிஜினல் மெந்திப் புலுசு போல இருக்கு. இத நான் ஒரு potluck dinnerல பார்த்து, நல்லா இருந்ததால செய்முறை கேட்டு வாங்கினேன். இதோட பேர் வேற எதாவதாவும் இருக்கலாம்.
[அப்படி எல்லாம் விட்டுட முடியுமா ஜெயஸ்ரீ? உப்புச்சாரே, ‘கருவாடு மைனஸ்’ செஞ்சு அசத்தியிருக்கோம். இதுவும் மெந்தி புலுசு (மீன் மைனஸ்)ன்னு போர்டு வெச்சுடலாம்.