
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு – 2 கப்
வெந்தயக் கீரை – 1 கப்
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய்
செய்முறை:
வெந்தயக் கீரையை, தனித் தனி இலையாக ஆய்ந்து😦 ஒரு கப் எடுத்து, தண்ணீரில் அலசி நீரை வடியவைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கீரையை லேசாக 2, 3 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும். கீரை சுண்டிவிடும்.
கோதுமை மாவு, கடலை மாவு, தயிர், மிளகாய்த் தூள், தேவையான உப்பு, சுண்டிய கீரை, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, சிறிது சிறிதாக வெந்நீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை அப்படியே ஈரமான துணியில் சுற்றி அல்லது ஒரு பாத்திரத்தில் மூடியை உட்புறமாக நீரால் துடைத்து, மூடிவைக்கவும்.
குறைந்தது ஒருமணி நேரம் கழித்து, மாவை எடுத்து மீண்டும் அடித்துப் பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
மைதா மாவு தோய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு (மிக மெல்லிதாக இடவரும்.) நிதானமான சூட்டில் தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் சில துளிகள் எண்ணெய் விடவும்.
திருப்பிப் போட்டு விரும்பினால் இன்னும் சில துளிகள் எண்ணெய் விட்டு தோசைத் திருப்பியால் சுற்றி அழுத்திக் கொடுத்து திருப்பவும்.
இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும், கல்லிலிருந்து எடுத்துப் பரிமாறலாம்.
methi roti
* இந்தச் சப்பாத்தி ஆறியதும் சாதாச் சப்பாத்தியைப் போல் இல்லாமல் சிறிது மொறுமொறுப்பாக ஆகலாம். ஆனாலும் சுவையாக இருக்கும்.
* நீண்ட பிரயாணங்களுக்கும் எடுத்துப் போகலாம். கெடாது.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தயிர்ப் பச்சடி(Raitha), தால் வகைகள், கார, இனிப்பு ஊறுகாய்கள்…