
அண்மையில் ஒரு புத்தகத்தில் நான் படித்த செய்தி இது. ‘‘அன்பான அப்பா, தன் மகளை பள்ளியில் சேர்க்க போகிறார். அப்பா எந்த மதத்தையும் விரும்பாதவர். பள்ளியில் சேர்க்கும் போது மதத்தை கேட்கிறார்கள். வாக்கு வாதம் நடக்கிறது.’’ பின்பு சேர்த்தாரா? இல்லையா? என்பது இருக்கட்டும். மதமே பிடிக்காத ஒருவரிடம் ஏதாவது ஒரு மதத்தை சொல்லுங்கள் என்று அவர் கேட்பது வெட்கக்கேடான ஒரு செயல். நமக்கு பிடிக்காத ஒரு விசயத்தை நம்மிடம் கேட்பது நாகரீகமா?
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் மட்டும் ஜாதி வாரியாக பிரிக்கப்படுகின்றனரே! என்ன (அ) நியாயம்? மதத்தின் பெயரையோ, சாதியின் பெயரையோ சொன்னால்தான் பள்ளியில் சேர்ப்பீர் என்று அடம் பிடித்தால் அக்குழந்தையின் எதிர்காலம் என்னாவது?
உங்களுக்கு ஓட்டு வேனும் என்பதற்காக சாதியை பிரித்து வைத்து இன்னும் அடிமைப்படுத்துகின்ற அரசியல் மூடர்களே. உங்களுக்கு கோடிகளில் லாபம் கிடைக்கிறதென்றால் புதியதொரு சட்டத்தை இயற்றுவீர்கள். ஆனால், நாமெல்லாம் ஒரே ஜாதி அது தமிழன் என்றோ இல்லை எந்த மதத்தையும் எந்த ஜாதியையும் விரும்பாதவர் மதச்சார்பற்றவர் என்று சொல்லிக் கொள்ள ஒரு சட்டம் இயற்றுங்களேன்…! இப்படி ஒரு சட்டத்தை இயற்றி அதற்கு ஒரு ஜாதிய தலைவரை போடாதீர். எல்லோரும் ஒரே குலம், ஒரு இனம், ஒரே மக்கள் என்றால் யாரையும் யாரும் ஆள வேண்டிவராது. இதை உணர்வது யார் என்பதுதான் என்னுடைய கேள்வி?