
1830-களில் யாருமே ரப்பரைப்பற்றி பெரிதாக தெரிந்து வைத்திருக்கவில்லை. தண்ணீரை ஒட்ட விடாமல் பார்த்துக் கொள்ளும் பொருள் என்ற அளவிலேயே அதைப் பற்றி தெரிந்து வைத்திருந்தார்கள். ரப்பரில் தெரிந்துகொள்ளவேண்டிய எந்த ஒரு விஷயமும் இல்லை என்று அன்றைய கண்டுபிடிப்பாளர்கள் முடிவு செய்திருந்தனர்.
சிறையில் சும்மா இருந்த நேரத்தில் எல்லாம் அவரது சிந்தனை ரப்பர் பற்றியே இருந்தது. ரப்பரை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால் வேதியியல் பாடம் அத்துப்படியாக தெரிந்து இருக்க வேண்டும். சார்லசுக்கோ வேதியியலில் ‘ஆ’னா ‘ஆ’வன்னா கூட தெரியாது. ஆனாலும் என்னவோ அவரிடம் இருந்து ரப்பர் ஆராய்ச்சியை பிரிக்கவே முடியவில்லை. இதற்காக இந்தியாவில் இருந்து வரும் ரப்பரை வாங்கி சிறைக்கு அனுப்பி வைக்கும்படி தனது மனைவியிடம் கூறியிருந்தார். அவரும் ரப்பரை அனுப்பி வைத்தார்.
ஒரு நாள் ரப்பரோடு சல்பரையும், கந்தகத்தையும் கலந்து புதிய ஆய்வை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கரைசலில் கொஞ்சம் சூடாக இருந்த அடுப்பின்மேல் கொட்டிவிட்டது. அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது தனது ஆய்வில் மும்முரமாக இருந்தார். இறுதியில் அடுப்பை சுத்தம் செய்யும் பொது சிந்திய ரப்பர் கரைசலை பெயர்த்து எடுத்தார்.
ரப்பரின் பிசுபிசுப்பு இப்போது இல்லை. ஒரு உலோகம் போல கெட்டியாக மாறி இருந்தது. மிருதுவாகவும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் பெற்று இருந்தது. கடுமையான வெப்பத்திலும், கடுங்குளிரிலும் பாதிக்காத நிலையை பெற்றிருந்தது. ரப்பரை பலவிதங்களில் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்தார். அதன்பலனாக, ரப்பரை உயர்ந்த வியாபார பொருளாக மாற்றிய வித்தகர் என்ற பட்டத்தை 1844-ல் சார்லஸ் குட்-இயர் பெற்றார். இருந்தாலும் அவரது துரதிருஷ்டம் கடைசி வரை அவரை கொடுமைப் படுத்தியே வந்தது.
அவர் உருவாக்கிய ரப்பர் கம்பெனிகள் மூலம் நூற்றுக்கணக்கானவர்கள் பணம் சம்பாதித்தும் கூட எதுவுமே சார்லசை சென்று சேரவில்லை. கடைசியில் தனது 59-வது வயதில் 1860, ஜூலை 1-ந் தேதி இறந்தார். தெருக்கோடியில் நின்ற சார்லஸ் இறக்கும் போது 2 லட்சம் பவுண்டுகள் கடன் சுமையோடுதான் இறந்தார். கடன்காரர் என்ற பெயரோடுதான் உயிர் நீத்தார். இறுதிவரை ரப்பருக்காகவே தன் வாழ்நாளை அர்பணித்த அவரை அந்த ரப்பர் கடைசி வரை காப்பாற்றவேயில்லை. அதேவேளையில் அந்த ரப்பரை வைத்தே பல புதிய கோடீஸ்வரர்கள் உருவானார்கள் என்பதுதான் வியப்பான உண்மை.!