
print
![]() |
குலும்பன், குலும்பி தம்பதி |
பட்ஜெட் சுற்றுலாவுக்கும், ஒரு நாள் பிக்னிக்கிற்கும் ஏற்ற இடம் ராமக்கல் மெட்டு. வருடம் முழுவதும் நடு நடுங்க வைக்கும் குளிர்தான் இதன் சிறப்பு.
தமிழ்நாடு – கேரளா வன எல்லைக்குள் கேரளா பகுதியில் அமைந்துள்ள மிக உயர்ந்த முகடுதான் ராமக்கல் மெட்டு. தேக்கடி, மூணாறு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு தவறாமல் வந்து இந்த குளிரை அனுபவித்துவிட்டு போவார்கள்.
18 ஹேர்பின் வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதையில் பயணிப்பதே ஒரு சுகமான அனுபவம்தான். காபி, மிளகு என நறுமணம் கமழும் மலைப்பயிர்களை ரசித்தப்படி பயணம் செய்தால் ராமக்கல் மெட்டு வந்துவிடும். காற்றாலைகளையும் பார்க்காலாம்
அங்கு முதலில் நம்மை வரவேற்பது 60 அடி உயர ஆதிவாசி தம்பதிகள் சிலைதான். இம் மலையில் வாழ்ந்த குலும்பன், குலும்பி தம்பதிகளின் சிமெண்ட் சிலைதான் இந்த இடத்தின் ஹைலைட். சிலையை சுற்றியுள்ள பாறைகளில் நின்று கீழே பார்த்தால் ஆகாயத்தில் பறந்து கொண்டே பார்ப்பது போல் இருக்கும்.
நம் கண்ணெதிரே பாதத்தின் கீழே கம்பம், உத்தமபாளையம், பண்ணைபுரம், கோம்பை ஆகிய ஊர்களைப் பார்த்து ரசிக்கலாம். கேரளாவின் மலைகளின் வனப்பையும் அழகையும் பார்க்க ரசிக்க சிறந்த இடம்.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து 13 கி.மீ. மலை வழிப் பயணம் செய்தால் கம்பம் மெட்டு வருகிறது. அங்கிருந்து 10 கி.மீ. பயணித்தால் ராமக்கல் மெட்டு வந்துவிடும். ராமக்கல் மெட்டில் வீடுகள், கடைகள் உண்டு. இரவில் தாங்கும் விடுதிகள் இல்லை. கம்பம் நகரம் தான் தங்குவதற்கு ஏற்றது.
குளிரையும் வேகமாக வீசும் காற்றையும் அனுபவிக்க நினைப்பவர்களுக்கு ராமக்கல் மெட்டு அருமையான இடம்..!!!