
![]() |
ADVOCATE INGERSOL |
ஒரு நீக்ரோ பசுவைத் திருடிவிட்டான். அவனுக்காக வாதாட யாருமில்லை. இங்கர்சால் தானே முன்வந்து வாதாடினாராம். அவனுக்கு விடுதலை கிடைத்தது. அப்புறம் அவனைத் தனியாக அழைத்து இங்கர்சால் கேட்டார். நீ தான் விடுதலை ஆகிவிட்டாயே இப்போதாவது உண்மையைச் சொல்! நீ பசுவைத் திருடியது உண்மைதானே? அதற்கு அவன் “நான் திருடியது உண்மைதான். இந்த வழக்கின் தொடக்கத்தில் நான் குற்றவாளிதான். ஆனால் நீங்கள் ஆதாரங்களை அள்ளி வீசி வாதம் நடத்த நடத்த நான்தான் பசுவைத் திருடினேனான்னு எனக்கே சந்தேகமாகிவிட்டது.