Header Banner Advertisement

வாழைக்காய்த் தோல் கறி தயாரிக்கும் முறை


001

print

வாழைத்தோலின் மேல்பகுதியையும் லேசாக கத்தியை சாய்த்துப் பிடித்து உரித்து விடவும். மிக மென்மையாக அந்தத் தோல்பகுதி சுலபமாக வந்துவிடும்

தேவையான பொருள்கள்:

வாழைக்காய்த் தோல்
புளி – நெல்லிக்காய் அளவு
துவரம் பருப்பு – 1/4 கப்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு
மஞ்சள் தூள்
கொத்தமல்லித் தழை

தாளிக்க – எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை

செய்முறை:

தோலை கொஞ்சம் காய்ப் பகுதியுடனேயே உரித்துக் கொண்டு பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை கரைத்துக் கொள்ளவும்.

துவரம் பருப்பு இலையிலையாக அல்லது அரை வேக்காடாக வேகவைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.

நறுக்கிய காயை(?)ப் போட்டு, புளித் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும். சட்டெனெ வெந்துவிடும். (கொஞ்சம் துவர்ப்பாக இருக்குமென்பதால் புளி கட்டாயம் தேவை.)

காரம் அதிகம் விரும்புபவர்கள், 1/2 டீஸ்பூன் கறிப் பொடியும் தூவிக் கொள்ளலாம்.

அரை வேக்காடாக துவரம்பருப்பை வேகவைத்து, நீரை ஒட்டப் பிழிந்து, பருப்பை இத்துடன் சேர்த்துக் கலந்து மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

தேங்காய், கொத்தமல்லைத் தழை தூவி உபயோகிக்கவும்.

நேந்திரங்காய்த் தோலை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நீரில் அரைவேக்காடு வேகவைத்து நீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவல் பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துவைத்துக் கொண்டு, அதையும் காயுடன் சேர்த்து, மேலும் தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையாக இருக்கும். ‘துவரன்’ என்று பெயர்.

தோலை நன்றாக வதக்கிக் கொண்டு, அத்துடன் புளி, காய்ந்த மிளகாய், உப்பு, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்துக் கடுகு தாளித்தால் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம்.