
நமது வாழ்க்கையில் முக்கியமாக முடிந்தளவு தவிர்த்துவிடவேண்டிய விஷயங்களில் ஒன்று விவாதம்… வம்புபேச்சுகள்
மன அமைதியை நிம்மதியை கொடுக்ககூடியவைகளில் இதுவும் முக்கியமான ஒன்றுதான்…
விவாதங்களில் மன அமைதி மட்டும் கெடுவதில்லை..நமது சக்தியின் பெரும்பான்மை வீணடிக்கப்படுகின்றது… நமது பொன்னான நேரம் விரயம்…
டென்ஷனும் அதிகரித்து வியர்த்துகொட்டி மிக படபடப்பாகி.. ஆத்திரமாகி.. தேவையற்ற வார்த்தைகளை உபயோகித்து.. நமக்கே தெரியாமல் ஏதேதோ நடந்தேறிவிடும்…
பின்னர் நிதானமாக தொடர் அவதிக்குள்ளாவோம்… எப்பொழுதுமே சாதாரணமாக ஆரம்பித்த விதங்கள்தான் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து பெரும்பாதிப்பை உண்டாக்குகின்றது…
எங்கே விவாதம்..வம்பு பேச்சு உள்ளதோ அந்த இடத்தைவிட்டு சமர்த்தாக வெளியேறிவிடுவது நல்லது..யார் எதற்கு எப்படி வம்பிற்கிழுத்தாலும்..ஒரு புண்ணகை போதும்.. நைசாக நழுவிவிடுவது உத்தமம்…
நாம் அமைதியாக இருக்கவேண்டும்… மனம்..மனோசக்தி கெடாமல் இருக்கவேண்டும்…எப்பொழுதும் புண்ணகை தவழும் முகத்தோடு இருக்கவேண்டும் எனில்…மவுனமே சிறந்தது…
அதற்காக சில பல சமயங்களில் சிறு பொருளிழப்புகூட ஏற்படினும் கவலை வேண்டாம்…. மனம் நிம்மதியாக இருந்தால்தான் ஏதேதோ சாதித்துவிடுவோமே… அமைதியாக….
அதற்காக எல்லா விஷயங்களுக்கும் எந்நேரமும் வாயை மூடிக்கொண்டிருக்க முடியாதுதான்… தாங்கமுடியாத தருணங்களில் கொஞ்சம் குறைத்து அமைதியாக இசையோ..எழுதுவது படிப்பது என மனஅமைதியாக செய்யகூடிய காரியங்களில் கவனத்தை திசைதிருப்பி மவுனம் காக்கலாம்..
எப்படி பார்த்தாலும் விவாதம் வீண்வம்புகள் சாதித்ததைவிட… மவுனம் அதிகம் சாதிக்கிறது..இதனை அவரவர் அனுபவத்திலேயே உணர்ந்திருப்பீர்கள்…
மேலும் முயல்வோம்..கெடுதலுக்கல்லவே..நன்மைக்காகதானே.. முயல்வோம்…