
வாழ்க்கையில் நம்முடைய உணவுகளை தீர்மானிப்பது மனோபாவம்தான்….
அறிவியல் ரீதியாக சொல்லவேண்டுமென்றால் உள்ளிருக்கும் எண்ணங்கள்தான் வெளியுலக நடப்பாக, அனுபவமாக மாறுகிறது…
அதனால் எது நடந்தாலுமே..எதனை எதிர்கொண்டாலுமே… எதிர்மறையான எண்ணங்களை… பேச்சை தவிர்க்கவும்…
எதிர்மறையான எண்ணங்கள் நேர்மறையான சிந்தனைக்கு செயல்களுக்கு தடையாகிவிடுகிறது….
இதனைதான் சிலர் மிக பெருமையாக ஆதங்கத்தோடு சொல்லிகொள்வர்..நான்தான் அப்பவே சொன்னேன்ல இதெல்லாம் எனக்கு ஒத்துவராது… நான் ஆசைபட்டாலே அது நடக்கவே நடக்காது..ஆசைபட்டதுக்காகவே தடைபட்டுபோகும்
என்றெல்லாம் உளறுவர்…
அது அப்படி அல்ல… நமது எண்ணங்கள்தான் அப்படி நிகழவைக்கின்றது… எனக்கு விரைவில் அழகான நல்ல வீடு கிடைக்கும் என்று ஆசைபடுவதற்கும்..அதனையே உறுதியாக நம்புவதற்கும்..அதற்காக முனைப்போடு செயல்படுவதற்கும்
ஆமா எனக்கெல்லாம் எப்போ நல்ல வீடு கிடைக்கபோகிறது..நான் அதிர்ஷ்டகட்டை… அதெல்லாம் கனவுதான்… நான் ஆசைபட்டதற்காகவே கிடைக்க இருந்ததுகூட இல்லாமல் போகும் … என ஆதங்கபடுவதற்கும் அதிக அளவு வித்தியாசமிருக்கிறது ….
நேர்மறையான மொழிகளை திரும்ப திரும்ப கூறுவதன் மூலம் உள்மனதை நேர்மறையான மனோபவம் உடையதாக்கிறோம்…
உணர்வு மனம் செயலற்ற நிலையில்..வெறுப்படைந்த நிலையில் உள்மனம்தான் மிக சிறப்பாக செயல்படும்..சிந்திக்கும் வெற்றிக்கு வித்திடும்… அங்கே நமது நேர்மறை எண்ணங்கள் சிந்தனைகள் மிக பயனுள்ளதாகும்…
இங்கே முகநுலில் கூட… எனது கருத்துக்கள் ஏற்புடையதுபோல இருந்தாலும் நன்மை பயப்பதாக இருந்தாலும்.. தனது பிரச்சனைகளோடு ஒத்துபோவதுபோல் இருந்தாலும் ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும்…..
உடனடியாக ஒரு எதிர்பதமான கமெண்டடை வேகமாக போடுவர் ஆமா இதையெல்லாம் கடைபிடிக்கமுடியுமா..சாத்தியமில்லை என்பர்..போங்க உங்களுக்கென்ன…என் கஷ்டம் எனக்கு என்பர்
எனது பிரச்சனையை இவ்வழியில் சமாளிக்க இயலவே இயலாது என்று மிக உறுதியாக … என்னவோ அந்த கஷ்டத்தை மிக விரும்பி ஏற்றுக்கொண்டதுபோல் பேசி தனக்குத்தானே துக்கமடைவர்…
உங்களுக்கென்ன ரொம்ப ஈசியா சொல்லிடுவிங்க என்பர்..ஒன்றை புரிந்துகொள்ள தவறிவிடுகின்றோம்…ஏன் ஒரு ஆறுதலுக்காக ஒரு மகிழ்ச்சிக்காக இதனை கடைபிடித்துதான் பார்ப்பமே என்று எண்ணகூடாதா… இது நிச்சயம் நமக்கு நன்மை பயக்கும் என்று எண்ணகூடாதா….
இது நிச்சயம் பல ஆராய்ச்சிகளின் வெளிப்பாடு… பிராக்டிக்கல் அனுபவம்தான் … முடியக்கூடியதுதான் … மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதை நமது மனம் ஏன் நம்ப மறுக்கின்றது…
எண்ணவும் சிந்திக்கவும்கூட கஞ்சதனமா… நம்பிக்கையின்மையான பொருமையின்மையா.. அப்படியெனில் எப்படி கடக்கபோகின்றோம் இந்நிலையை என்று நாமே சிந்தித்து செயல்பட்டுதான் பார்ப்போமே….