
நமது வாழ்க்கையை நாமேதான் புதுப்பித்துகொள்ளவேண்டும்.. சுவாரசியமாக்கி கொள்ளவேண்டும்… பிடித்த வகையில்… இதற்கெல்லாம் யாரையும் எதனையும் எதிர்பார்க்க அவசியபடாது…
வாழ்க்கையை சுவாசியமாக்கி கொள்ள நாம் எடுக்கும் முயற்சிகளின் முதல்படி நம்மை புதுப்பித்துக்கொள்ள உதவும்…
சுவாரசியத்திற்காக புதிய புதிய முயற்சிகளை தொடங்கவேண்டியது இருக்கும்..உதாரணமாக நடைஉடை பாவனைகள்… வாழ்க்கை முறை..பேச்சு.. நடவடிக்கைகள்.. அணுகுமுறை.. அன்றாட வேலைகள் என எல்லாவற்றிலுமே புதிய முயற்சிகள்… புதிய மாற்றங்கள் என கொண்டு வந்தால் வாழ்க்கை மிக சுவாரசியமாகதானிருக்கும்…
இதனை ஒரு முறை மட்டுமல்ல…. அவ்வப்போது.. எப்போதெல்லாம் போரடிக்கிறதோ..வாழ்க்கை மந்தமாக.. சுவாரசியமற்று கொட்டாவி விடவைக்கின்றதோ… அப்போதெல்லாம்.. புதிய மாற்றங்கள்…
நமது அலமாரியை இடம் மாற்றி வைத்து ரசிப்பது.. உடைகளை வேறுவிதமாக அடுக்கிவைத்து ரசிப்பது… கட்டிலை வேறுபுறம் மாற்றி அமைப்பது.. குடும்பத்தை வெளியில் அழைத்து சென்று மகிழ்வது..குழந்தைகளோடு ஈடுபாடாக பேசி ஆச்சரியபடுவது…
என…எதுவேண்டுமானாலும்..எப்படி வேண்டுமானாலும் யாருக்கும் தொந்தரவு ஏற்படாதவாறு சுவாரசியபடுத்திகொண்டே இருக்கலாம்…
வாழ்க்கை சுவாரசியமற்று இருப்பதுவே எல்லா பிரச்சனைகளுக்குமே அடிப்படையாக இருக்கின்றது..
ஒரு சிலர் இம்மாதிரியான வார்த்தைகளை கண்டுகொள்ளவே மாட்டார்..ஆமாம்..என் பிரச்னை என்ன…இது ஏன் இப்போ என்ற அலட்சியபடுத்துவர்…
அதற்கு காரணம் புதிய விஷயங்களை பரிட்சித்து பார்ப்பதில் அவர்களுக்கு ஆர்வமில்லை என்பதைவிட.. புதிய மாற்றம் வேறு விதமான.. இதிலும் மோசமான விளைவுகளை கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான்….
அதுகூட ஒரு சுவாரசியம்தான்…ஏற்படும் மாற்றங்கள் அனைத்துமே சுவாரசியம்தான்..பாம்பு நம்மை துரத்தினாலும் சுவாரசியம்தான்..திருடன் நம் பொருட்களை அபகரித்துகொண்டு ஓடினாலும் சுவாரசியம்தான்.. அதற்காக நம் மனம் பரபரப்படைகின்றதே..அதுபற்றி செயல்களும் நமது விவரிப்புகளும் சுவாரசியமே….
உதாரணமாக குழந்தைகளின் விளையாட்டை உற்று கவனியுங்கள்… கொட்டுவார்கள்..அள்ளுவார்கள்..உடைப்பார்கள் பொருத்திபார்ப்பார்கள்… கண்ட இடங்களில் கிறுக்கி பார்ப்பார்கள்..ஏன் …மகிழ்ச்சியே..இப்படி செய்தால் எப்படி இருக்கும் என்று ஆர்வபட்டு செய்வதுவே..
சடாரென நமது மந்த மனநிலையை மாற்றவல்லது..முளையை சுறுசுறுப்படையவைத்து.. ஏகபட்ட மாற்றங்களை கொடுக்கும்..
செய்கின்ற வேலை எதுவாகினும் அதை களைப்பின்றி செய்யவும்..அதில் கிடைக்கும் சுகத்தை அனுபவித்து உணரவும் சுவாரசியங்கள் உதவும்…
வாழ்க்கையை சுவாரசியபடுத்துவோம்…