
உலகிலேயே மிவும் துயரம் நிறைந்தவர்… அதிகம் தோல்வியையே தழுவுபவர் யாரென்றால் எதிலும் தயக்கம் கொண்டே இருப்பவர்தான்,,,,
இந்த தயக்கம்தான் பெரும்பாலும் நமது மகிழ்ச்சியை பறித்துகொண்டு விடுகின்றது…
முடிவெடுக்கமுடியாமல் குழம்பி..தடுமாறி வேதனைபடுவதைவிட…. நல்லதோ..கெட்டதோ.. ஒரு முடிவை எடுத்து பரிசீலித்து பார்த்துவிடலாமே….
அதற்காக..அவசரபடுங்கள் என்று சொல்லவில்லை….. அவசரத்திற்கும்..உடனடி முடிவுக்கும் வித்தியாசம் உண்டு…
அதனை சரிவர பகுத்தறிந்தவர்களுக்கு அதிகபடியான துயரமோ.. தோல்வியோ நெருங்குவதில்லை
பெரும்பாலும் உடனடி முடிவின்மூலம்… நேரத்தை மிச்சபடுத்துவது மட்டுமல்ல…நல்ல காரியபலிதமும்… நிம்மதியும் கிடைத்துவிடுகிற்து….
அப்புறம் குழப்பமோ..துயரமோ ஏது….
பழக்கங்கள்கூட நமது வாழ்க்கையை நிர்ணயிப்பதுதான்… நாம் இயங்குவதற்கு… பழக்கங்கள்தான் அத்தியாவசியமாகின்றது..
சிறு பிள்ளையிலுருந்தே..ஒவ்வொருவராக ஒவ்வொன்றாக பார்த்து..தெரிந்து எல்லாவற்றிற்குமே பழகுகின்றோம்….
அந்த பழக்கங்கள்தான் நம்மை பின்னர் வழிநடத்துகின்றது…
நல்ல சிந்தனைகள்கூட பழக்கங்கள்தான்….. சிந்திக்க பழகுதல்… நற்செயல்கள் செய்ய பழகுதல்…. நல்ல விஷயங்களை பழகுதல்..அதனையே ஃபாலோ செய்தல்….
சோ…. நல்ல விஷயங்களையும் பழகுவோம்..சிந்திப்போம்… நல்ல முடிவாக சரியான நேரத்தில் எடுத்து மகிழ்வோடு வாழ்வோம்…..