
தினசரி..நமது உடலுழைப்பு..மூளைக்கான வேலை… பொழுதுபோக்கு போன்றவைகளை திட்டமிட்டு சரிவர பயன்படுத்தினாலே போதும்…. சோர்வாகவோ..போராகவோ வாழ்க்கை போகாது….
ஒரே காரியத்தை தொடர்ந்து செய்வது… உதாரணமாக… அலுவலக வேலையோ… பொழுதுபோக்காக டி.வி பார்ப்பது வலைதளத்தில் மூழ்குவது… ஓய்வெடுத்துகொண்டேயிருப்பது போன்றவைகள் எளிதில் சோர்வடையச்செய்யும்… வாழ்க்கையே மிக போர் என்று ஆயாசமாக பேசதோன்றும்…
எந்த வேலையாக இருந்தாலும்… போர்..போதும் என்று உள்ளேயிருந்து ஒரு அலாரம் ஒளிக்கும்….அப்போதே அதனை நிறுத்திவிட்டு மாற்று வேலையில் ஈடுபடலாம்…
ஒரே மூச்சாக… பொழுதுபோக்குகள் பலவற்றில் ஈடுபட்டு நுனிபுல் மேய்பவர்கள்… காலாகாலத்தில் என்னை போன்றவர்களை தேடி ஓடவேண்டி வந்துவிடுகிறது…
எதுவாக இருந்தாலும் போதும் என்ற உள்மன எச்சரிக்கையை அசட்டை செய்யவேண்டாம்….
நாளில் எதோ ஒரு நேரத்தில்…உடல் மனம்.. எல்லாவற்றையுமே தளர்வாக..மிக தளர்வாக…. எந்தவித இறுக்கமும் இன்றி கிடக்க பழவேண்டும்…. அப்படியே சற்று நேரம் கண்ணயரலாம் (வாய்ப்புகளிருக்கும் நேரம் மட்டும்)
இயல்பாக…… மிக இயல்பாக….. ஆழ மூச்சு விட்டு… கண்களுக்கு ஓய்வும்…மாற்றமும் கொடுக்கலாம்….
இவ்விதம் நம்மை நாமே செப்பணிட்டுகொண்டாலே போதும் வாழ்க்கை மிக அழகாக..அமைதியாக போகும்.. என்னைபோன்றவர்களின் அவசியம் குறையும்…
முயற்சிப்போமே…..