
நமக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய மனிதர்கள்..விஷயங்களை நாம் அறிந்து வைத்திருத்தல் வேண்டும்….
மன உளைச்சலை அலட்சியபடுத்தவேண்டாம்… அது சும்மா போகாது..நம்மீது விளைவுகளை ஏற்படுத்திவிடும்…
மன உளைச்சலை தலைவலியை கொடுக்கும் விஷயத்திலோ… இடத்திலோ உழன்றுகொண்டிருக்காமல்..சடாரென வெளியேறிவிடுவது… மிக நிம்மதியை தரும்…நல்ல சுவாசம்..ஆழ்ந்த குளிர்ச்சியான சுவாசம் ஏற்படும்…
வாழ்க்கையில் மாற்றங்கள் அவசியம்தான்…. சிறிது..சிறிதாக.. ஒரே நேரத்தில் பல மாற்றங்கள் அச்சுறுத்தும்..மேலும் மன அழற்சியை ஏற்படுத்தும்…
ஒவ்வொரு நாளும் கட்டாயம் ஓய்வு தேவை..அதுவே மாபெரும் மருந்து நமது மன உடல் ஆரோக்கியத்திற்கு…
சில நேரங்களில் அவசியமான வேலை..கடிகாரம் எல்லாவற்றையும் அசட்டைசெய்யவேண்டிகூட வரலாம்.. பரவாயில்லை..ஓய்வே புத்துணர்ச்சி தரும்… வெற்றியை நோக்கி நடத்திச்செல்லும்…
எப்படி ஆசுவாசமாக..தளர்வாக இருப்பது என்பதை நீங்களே உணர்ந்து வடிவைத்துகொள்வது நலம்…
ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பொருத்தமான பயிற்சியை மேற்கொள்வது நன்மை தரும்… தமக்கு பொருத்தமான பயிற்சியைகூட மேற்கொள்ளலாம்…
அவ்வப்போது வாழ்வில் புதியதாய் எதையாவது முயற்சிக்கலாம்.. மாற்றங்களை செய்யலாம்..அப்போதுதான் வாழ்வில் சலிப்பு தோன்றாது… கொஞ்சம் புத்துணர்ச்சியாய் இருக்கும்…
முயற்சிப்போமே…புத்துணர்ச்சியாய் எப்போதும் இருக்க…