
ஒருசிலர்…எல்லாவற்றிற்குமே கவலைபடுவதும்..சின்ன விஷயங்களையும் பெரிதுபடுத்தி..வேதனைபடுவதும்… யாரை பார்த்தாலும் எப்போதும் கஷ்டங்களையே பேசி.. வெறுப்படைய வைப்பதும்… அதனாலேயே சரியான தூக்கம் இன்றி… ஏக்கமாகவே… உருவம் ..முகம்… வெளிறி உருக்குலைந்து காணப்படுவர்….
இப்படிபட்டவர்களது… பேச்சு பெரும்பாலும் மற்றவர்களை எரிச்சலுட்டுவதாகவே இருக்கும்.. அடுத்தவர் எரிச்சலடைவது தெரிந்தாலும் விடாபிடியாக தொடர்வது..அல்லது அவரைபற்றியும் வதந்தி பேசுவது என தொல்லைகளை தொடர்ந்துகொண்டேதான் இருப்பர்…
தாம் பேசுவதை யாருமே அல்லது குடும்பத்தினர்..உறவினர் ஏற்றுக்கொள்ளவில்லை..என தெரிந்தும் தன் தரப்பில் சரியாக..மிக நியாயமாக உணர்ந்துகொண்டு… தொடர்வது மேலும்..மேலும் பிரச்சனைகளை அதிகபடுத்தும்….
என்னதான் தன் தரப்பில் நியாயமாக உணர்ந்தாலும்.. அவ்வப்போது ஒரு சுயபரிசோதனை அவசியம்…. தனது கருத்து எத்தனை பேரை கவர்கின்றது..ஏற்றுகொள்கின்றனர்… அல்லது எரிச்சலைடைகின்றனர்… நிராகரிக்கின்றனர்..தம்மை கண்டாலே விலகுகின்றனர்…
என்பதை அறிந்து… மேலும் எரிச்சல் கொள்ளாமல்.. மேலும்..மேலும்..தன்னைபற்றியே நிறுபிக்க முயலாமல்..தனது செயல்களை… பேச்சை வேறு ஆங்கிளில் யோசித்து கட்டாயம் மாற்றிகொள்வது எல்லா வகையிலும் நன்மையை தரும்…
இந்த நிலையை மாற்றிகொள்ளாவிட்டால் முன்னேற்றம் சற்று கடினம்… அதுமட்டுமில்லாமல்…பலரை தொல்லைக்குள்ளாக்கி.. தனிமைபடவும் நேரிடலாம்…
நமக்கு தெரியாதா…யாருமற்ற தனிமை எத்துணை கொடியது என்று… என்னவெல்லாம் பாதிப்புகளை கொடுக்கும் என்று…
ஒரு சிலரை பாருங்களேன்…. குறிப்பாக அமைதியாக பிரச்சனையின்றி வாழ்வில் முன்னேறியவர்களை சொல்கின்றேன்… வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் வேதனைகள் வரினும் அமைதியாக… நகைச்சுவை உணர்வோடு..சிரித்து பேசி காரியம் செய்வர்…
உள்ளே துயரங்கள் மிகுந்திருப்பினும்…. தொழில் வியாபாரம்..குடும்பம் எங்கும் நெருக்கடிகள் எனினும்… நகைசுவை எல்லாவற்றையும் மிக லேசாக்கிவிடும்… புது உத்திகள் தோன்றும் பிரச்சனைகளை சமாளிக்க….
அடுத்து மிக எளிதாக பலரையும் கவர்ந்திழுத்து விடுவோம்.. உதாரணமாக பாருங்களேன்..
தற்போது முகபுத்தகத்தில்கூட பலர் மிக நகைச்சுவையாக பேசுவது போஸ்ட் போடுவது என பலரை தன்வசமாக்கி வைத்திருக்கின்றனர்.. அப்படிபட்டவர்களுக்குதான் இங்கே நல்ல நட்புகள் அதிகம் ..பலரும் மிட்டாயை நாடும் ஈ..எறும்பை போல் அதிகம் அவரையே நாடுகின்றனர்..
ஏன் யோசியுங்களேன்…
அவருக்கு மட்டும் கஷ்டம் துயரமா இல்லை..பார்க்கபோனால் மற்றவர்களைவிட அவருக்குதான் அதிகம் பிரச்சனைகள் இருக்கும்..அதிலிருந்து வெளிபடவே இவ்வாறு நகைச்சுவையாக தன்னை வெளிபடுத்திகொண்டிருப்பர்…
எது பெட்டர் என்று யோசித்து பார்ப்போமே..
அவரவர் நிலைகளை…….